பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி

நெய்தலங் கானல் என்பது கடற்கரையைச் சார்ந்த ஒர் ஊர் : அவ்வூரொடு யாதோ ஒருவகையான் தொடர்பு கொண்டிருந்தமையான், இவ் விளஞ்சேட் சென்னி, கெய் தலங் கானல் இளஞ்சேட் சென்னி என அழைக்கப்பெற் மறு ளான்; இவன் பெயர், சோமான் பாமுளுர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி எனவும் வழங்கப் பெறுதலின், இவன், சோனுக்குரிய பாமுளுரை வென்று அழித்தான்் என அறியலாம் : இளஞ்சேட் சென்னி, எண்ணியது எண்ணியாங் கெய்தும் கிண்ணியனுவன்; கைப்பற்றுதற்கரிய காவலமைந்த பகைவர் கோட்டை அப் பகைவரிடம் இருக்கும்போதே, "இந்தக் கோட்டையை கினக்குத் தந்தேன், இன்றுமுதல் அது கின் உடைமை யாகுக' எனத் தன்னைப் பாடிவரும் பாணனுக்கு அளிக்கும் அத்துணைத் துணிவும், அவ்வாறே, அக்கோட்டையை வென்று அப் பாணனுக்கு அளிக்கும் ஆற்றலும் வாய்ந் தவனுவன்;

'ஒன்னுர்,

ஆரெயில் அவர்கட்டாகவும், நமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்.’ (புறம்: உ0க.)

இளஞ்சேட்சென்னி, தன்னைப் பணிந்து வழிபட்டு வாழ்வாரைத் தழுவி அன்பு காட்டும் அருட்குணம் உடை யவன்; பிறர்பழி கூறுவதையே தொழிலாகக் கொண்டார் கூறுவனவற்றைக் கொள்ளாக் குணமுடையவன் ; ஒரு வன்பால் குற்றம் உண்டு என்பதை அறிவானும், நூலானும் துணிந்தான்ுயின், அக் குற்றத்திற்குரிய தண்டத்தை அவர்க்கு அளிக்கத் தவருன்; குற்றம்செய்தான்் தன் குற்றம் உணர்ந்து பணிந்து பிழைபொறுக்க வேண்டுவன யின், பிழைபொறுத்துத் தண்டத்தை நீக்குவதோடு, அவற்கு அருளும் செய்வன்; தன்மனே நோக்கிவரும் மக்கட் கெல்லாம், அமிழ்தினும் சிறந்த உணவை அள்ளி வழங்கும்