பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியுடை வேந்தர் மூவருள், சங்கம் வைத்துத் தமிழை. வளர்த்த பெருமை பாண்டி மன்னரைச் சாந்ததாகும். அவரால் தமிழகம் இன்றும் வீறுகொண்டு நிற்கின்றதென் முல், அது, மிகையாகாது உலக அற நூலாகிய திருக்குறள் மதுரைத் தமிழ்ச்சங்கத்து அரங்கே றியதென்றால் அவர் பெருமையை அளப்பிட்டுரைக்க ஒல்லுங்கொல்?

இஃதன்றியும் அவர் கோல்முறை கோடாக் கொற்றவர்; கோவலனைக் கொன்ற பழிதீரத் தன் உயிரையே ஆணியாகக்கொண்டு வளைந்த கோலச் செங்கோலாக நிமிர்த்திய அறமுறையும் பாண்டியர் பெருமையை விளக்கும் பான்மைத்து.

எல்லாவற்ருனும் உயர்ந்த குடிப்பண்பினாாகிய இப் பாண்டியர்தம் வரலாறு, இன்று நம் தமிழகத்தில் 'பாண்டியர் ' என்னும் பெயரால் நூலாக மலர்கின்றது.

இதனைத் திரு. புலவர், கா. கோவித்தன் அவர்கள் வர லாற்ற நூலாக ஆக்கி உதவியுள்ளார்கள். இச்சீரிய நூல் சங்ககால அரசர் வரிசை"யில் மூன்ருவதாக கன்முறையில் அமைத்து வெளியிட்டுள்ளோம்.

கந்தமிழக மேன்மக்கள் இந்நூலே வாங்கிக் கற்றுப் பாண்டிவேந்தர் பண்பாட்டையும் மொழிப்பற்றையும் நாடெல்லாம் நலம்பெறப் பாப்புவித்து இன்புறுவார்களென கம்புகின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.