பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண் டி யர்

مصممسحيمي تيهسسس،

தோற்றுவாய்

சிலம்பும், மேகலையும் சிறக்க அளித்த சோர் கோவும், சாத்தனரும், 'தமிழகம்,” எனப் பெயரிட்டு அழைக்கும் வடவேங்கடம் தென் குமரிகட்கு இடைப்பட்ட இக் நாட்டை, ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனுர், 'வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு,” எனப் பெய ரிட்டுப் போற்றுவதால், தமிழகம், மிகப் பழைய காலத்தி லிருந்தே சேர, சோழ, பாண்டிய மரபினரால் ஆளப்பட்டு வந்துளது என்பது புலனும், இப் பேரரசுகள் மூன்றும், கிழக்கே சீனப் பேரரசும், மேற்கே உரோமானியப் பேரா சும் சிறந்து விளங்கிய அக் காலத்திலேயே, அவற்ருே டெர்ப்பச் சிறந்து விளங்கிய பழமையும், பெருமையும் உடையனவாகும் ; இவ் வாசுகள் இன்ன காலத்தே தோன் றின என்ருே, இன்னால் தோற்றுவிக்கப்பட்டன என்ருே அறுதியிட்டுக் கூறமாட்டாப் பழமை வாய்ந்தன ; இவ் வாசுகளின் பழமை காண முற்பட்டார் அனைவரும், 'கல் தோன்றி மண் தோன் முக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி,” “படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிகள்,' என்றே கூறி அமைவாராயினர். வடமொழி இராமாயண ஆசிரியர் வான்மீகியாராலும், அம் மொழிப் பேரிலக்கணப் பேராசிரியர் காத்தியாயனராலும், தங்கள் நூல்களில், சீரும், சிறப்பும்பெற்ற நாடுகளாக, இந் நாடுகள் கூறப்பட்டுள்ளன ; இந்திய நாட்டின் பெரும்பகுதியினே வென்று ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட மவுரியப் பேரரசன் அசோகன், "என் ஆட்சியோடொத்த, என் ஆட்சிக்குட்படாப் பேரரசுகள், சேர, சோழ, பாண்டிய