பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 13

டாமல் தடுக்கும்,” என்றும், "புகழ்மிக்க கொற்கைக்கண், முத்தும், வலம்புரியும் கலந்து காட்சி தரும்,” என்றும், "கடலுள் மூழ்கிக்கொண்ட முத்துச் சிப்பிகளைக் கள்விலை யாகத் தரும் கவின்மிகு வளமுடையது கொற்கை,” என்றும், முத்தெடுக்கக் கடலுள் மூழ்கிய பரதவர், ஆண்டுறை சுரு மீன்களோடு போரிட்டுக் கொன்று போக்கி, முத்துக்களே வாரிக்கொண்டு வருங்கால், கொற்கைத் துறைக்கண் வாழ்வார், சங்கு முழக்கி வரவேற்பர்,” என்றும் புலவர்கள் பாராட்டுவர் :

" மறப் போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்

கொற்கையம் பெருந்துறை முத்து” இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர் நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் ாற்றேர் வழுகி கொற்கை முன்துறை.” விறற் போர்ப் பாண்டியன், புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முக்கம்.” "பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி

நாசரி நறவின் மகிழ்கொடை கூட்டும் பேரிசைக் கொற்கை." இலங்கிரும் பாப்பின் எறிசுரு நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமில் பாதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்.”

(அகம்: உஎ கட0, உ0க, உகசு, டடுo) இவ்வாறு, பழமையால், பெருமையால், மொழிவளர் சிறப்பால் பாடுற்ற பாண்டிநாட்டைக் கடைச்சங்க காலத்தே இருந்து அரசாண்ட அரசர் இருபத்தைவர் வரலாற்றை, அக்காலப் புலவர்கள் அளித்த பாக்களின் துணைகொண்டு இயன்ற அளவு எடுத்துரைப்பதே இந் நூல்.