பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அறிவுடை நம்பி

பாண்டியன் அறிவுடை நம்பி என, இவன் பெயர் ஏடு களில் எழுதப் பெற்றுளது ஒன்றே, இவன் பாண்டியர் வழி வந்தவன் என்பதை அறிவிக்கிறது ; ஆடவரிற் சிறந்தான்ே நம்பி என்றலும், பெண்டிரிற் சிறந்தாளே கங்கை என்றலும் தமிழ்நால் மரபு ஆகலாலும், அறிவுடை என்ற அடை இவன் பெயர் முன் இடப்பெற்றுள்ளமையாலும், பாண்டி யன் அறிவுடை நம்பி, ஆடவரிற் சிறந்தவன், அறிவால்

நிறைந்தவன் என்று கொள்க.

அறிவுடை நம்பி, நாட்டின் தேவையை நன்கு உணர்ந்த நல்லரசனுவன் ; நாடாட்சிக்கு வேண்டும் நல்லறிவை, அறிந்தார்வாய்க் கேட்கும், அவாவுடையனவன். புதல்வர்ப் பேறு பொருட்கேடு ; ஆகவே, புதல்வர்ப் பேற்றினைப் போற்ருதொழிக’ எனக் கூறும் இக்காலம்போலல்லாமல், மக்கட்பேறு, மாநிதிப் பேற்றினும் மாண்புடைத்து ; அப் பேற்றினேப் பெறுதல் மாநிலத்தார் அனைவர்க்கும் கடனும் ; ஆகவே, போர்க்களம் புகும் வீாருள், அப்பேற்றினேப் பெரு தார் உளரேல், அவர் அப்பேற்றினைப் பெறுவான் வேண்டிப் போர்க்களம் புகுதல் ஒழிவாராக -பொன் போற் புதல் வர்ப் பெரு.அதீரும், எம அம்பு கடிவிடுதும் தும் அரண் சர்மின்-எனக் கூறி, மக்கட் பேற்றினே மாண்புடைச் செல்வமாப் போற்றிய காலம் சங்க காலம் :

'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்று எய்துப செறுநரும் விழையும் செயிர்நீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்.” (அகம் : சுசு) 'பெறுமவற்றுள், யாம் அறிவது இல்லை, அறிவு அறிந்த மக்கட் பேறு அல்ல பிற.” (குறள் : சுக)

என மக்கட் பேற்றின் மாண்பினை அவர் போற்றுவது அறிக, ஊர்வாழ் மக்களினும், ஊாாள் அரசர் மாட்டு இவ்