பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாண்டியர்

தாழ்வுகளுக்கேற்ப அவர்கள்பால் தான்் காட்டும் அன்பிலும் ஏற்றத் தாழ்வு காட்டுவள். ஒருகுடியில் பிறந்தார் பலரா யினும், அவருள் மூத்தோன் கல்விகல்லாதவனுகவும், இன் யோன் கற்ருேளுகவும் காட்சிகரின், மூத்தோனே, வா! என்றழைக்கவும் நானும் இவ்வுலக மக்கள், கற்ற அவன் இளையோன் ஆட்டும் சுட்டுவிமல் கண்டே ஆட முன்வருவர். மக்களைப் பிறப்பால் நால்வகையின ராக்கி, ஒருவர் பிறப்பி குலேயே உயர்ந்தவர்; ஒருவர் பிறப்பினலேயே இழிந் கவர் என்று கூறும் சில அற நூல்கள். ஆணுல், மேற்குலத்தில் பிறந்தான்் கல்லாதவனயும், இழிகுலத்தில் பிறந்தர்ன் கற்ற வஞயும் காணப்படின், கற்ற இழிகுலத்தான்் காலின் கீழ்க் கல்லாத மேற்குலத்தான்் வீழ்ந்து கிடப்பன்; ஆகவே, ஒருவன், உயர்விற்கும், தாழ்விற்கும் காரணம் பிறப்பன்று; அவன்பால் காணப்படும் கல்வி, கல்லாமைகளே அதற்குக் காரணமாம். ஆகவே, ஒவ்வொருவரும் கற்றல் வேண்டும” என்று கல்வியின் இன்றியமையாமையினே எடுத்துத் காட் டிப், பின்னர்க் கற்கும் முறை பற்றிக் கூறுவார், கல்வி யைக் காசு கொடுத்துப் பெறல் முடியாது; ஆணையிட்டும் அடிமைகொள்ளல் இயலாது; கல்வியை உடையார், அதை விரும்பிக் கொடுத்தாலன்றி, அதைப் பெறுதல் எவர்க்கும் அரிதாம்; ஆகவே, கல்வியைப் பெற விரும்புவார், அதை வேண்டுமளவு கொடுக்கும் கல்லுள்ளம் கல்விதரும் ஆசிரி யர்க்கு உண்டாமாறு ஆக்குதல் வேண்டும்; உள்ளம், அடிக்கும், ஆணைக்கும் அடங்காது; அது, அன்பிற்கும், ஆர்வத்திற்குமே அடங்கும்; அது தான்ே மாறுதல் வேண்டும்; அம்மாற்றம் உண்டாம் வண்ணம், அவர் உள் ளம் உவப்பன செய்தல் வேண்டும்; அது, அவர்க்குத் துன்பம் உற்றவழி முன் கின்று செய்யும் உதவியாலும், போதும் என அவர் உள்ளம் உணருமளவு பெரும் பொருள் தருதலாலும் உண்டாம். இது மட்டு மன்று; நாமோ மேற் குல மகன்! பணிந்து சிற்பது நம் பண்பிற்கு இழுக்கா மன்ருே என்ற எண்ணம் கற்கவருவார்பால் எழல் கூடாது; அந்த எண்ணம், அவர்பால் உண்டு என அறி

யின், ஆசிரியன் உள்ளம் திரித்துவிடும். கிரித்த உள்ளத்தி