பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்

தமிழர்கள், தங்கள் வாழ்விடங்களைத் தட்ப வெப்பக் கால நிலைகளுக்கேற்ப மாற்றி அமைத்து வாழும் வகையறிக் தவராவர்; வேனிற்காலத்தில் வேண்டுமளவு தென்றல் அழைதற்காம் சாலேகங்கள் அமைந்த வேனிற் பள்ளிகளில் வாழ்வர்; குளிர்காலத்தில் வாடை நுழையாவாறு அமைந்த வாயில்களைக் கொண்ட கூதிர்ப்பள்ளிகளில் குடியிருப்பர்; அதைப் போன்றே, தங்கள் ஆண்டு முதிர்ந்த காலத்தே இருந்து ஒய்வு பெறுதற்காம் இனிய இடங்களைத் தேர்ந்து வாழும் வகையினையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவ் வாறு, அவர்கள் வாழ்ந்த இடங்களுள், இலவந்திகைப் பள்ளி என்பதும் ஒன்று ; இலவந்திகைப் பள்ளியாவது, நீரை வேண்டுமளவு கிறைக்கவும், போக்கவும் வல்ல பொறி கள் அமைந்த வாவியை நடுவிடத்தே பெற்று, நறுமணம் நாறும் பல்வேறு மலர் நிறை மரங்களால் கிறைந்து மாண் புற்ற மலர்ப் பூஞ்சோலையாம்; அஃது, அரசர், தம் மனேவிய ரோடு இருந்து மகிழும் இடமாதலின் அரிய காவலையும் உடையது என்ப. கிறைக்குறின் கிறைத்துப் போக்குறின் போக்கும், பொறிப்படை அமைந்த பொங்கில வந்திண்க” (பெருங்கதை : க: ச0: கூகக-கஉ) பன்மலர் அடுக்கிய பந்தர் இலவந்திகை.” (சிலம்பு, கo: கூ0-கடக) அரசர்கள், இத்தகைய இலவந்திகைப் பள்ளிகளில் வாழும் காலம், ஆண்டு நிறைந்த முதுமைக்கால மாதலின், அவர்தம் வாழ் நாள், பெரும்பாலும் ஆண்டே முடிந்து போதலும் உண்டு; அவ்வாறு இறந்தார் பெயர்களோடு, அந்நிகழ்ச்சியை கினைப்பூட்டி வழங்கினர் தமிழர் ; இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கலங்கிள்ளி சேட் சென் னி என்பான் பெயரைக் காண்க. நன் மாறனும், அத்தகைய இலவந்திகைப் பள்ளி யொன்றில் இறந்துபோனமையால், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன் என அழைக்கப் பெற்று ளான்,

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பெற்ற வெற்றிகள் யாவை? அவளுல் அழிவுற்ற பகைவர் யாவர் என்பதை, அவனைப் பாடிய புலவர் ஐவருள் ஒருவரேனும்