பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 பாண்டியர்

காற்றெனச் சுழன்ருேடும் கடிய கேரும், கைவண்மை யும் உடைய செழியன், ஆலங் கானத்தே அரிய வெற்றி பெறுதற்குப் பெருந்துணே புரிந்தது மின்னென ஒளிவிடும் அவன் வேற்படையே. அப் படையின் விறல் விளங்கப் பாராட்டியுள்ளார் புலவர் ஆலம்பேரி சாத்தனர் :

காலியல் நெடுங்தேர்க் கைவண் செழியன் ஆலங் கானத்து அமர்கடங் துயர்த்த வேலினும் பல்லூழ் மின்னி. (அகம்: கஎடு) மதுரைக் காஞ்சி பாடி ச், செழியன் மாண்புகள் எல் லாம் பாராட்டிய புலவர் மாங்குடி கிழார், ஆலங் கானத்தே, அவனே வந்தெதிர்த்த வேந்தர், பகைவர் பார்த்த அளவி லேயே பயந்து பின்னிடுமாறு கொண்டுவந்து கிறுத்திய படைப் பெருமையினேயும், அப் படையையும், அப் படைக் குரியாரையும் அழித்து, அவர் தம் போர் முரசுகொண்ட செழியன் பேராண்மையினையும் பாராட்டியுள்ளார் :

ஆலங் கானத்து அஞ்சுவா இறுத்து

அாசுபட அமர்உழக்கி

முரசுகொண்டு களம்வேட்ட

அடுகிறல்உயர் புகழ்வேந்தே.”

- (மதுரைக்காஞ்சி கஉஎ-க.)

தலையாலங்கானத்தே தாம் பெற்ற வெற்றி குறித்து

வீரர்கள் எழுப்பிய ஆரவாரப் பேரொலி கேட்டு மகிழ்ந்த புலவர் கல்லாடனர், அவ்வெற்றிக்குரியோனுய செழியனைச் சென்று காணல் விருப்பொடு பாண்டி நாடு நோக்கி வரு வுழி, இடை வழியில், பாண்டிப் படையைச் சேர்ந்த யானை கள் படித்து கலக்கியதால் பாழுற்ற பகைவர் நாட்டு நீர்நிலை களையும், அவன் படைவீரர், தாம் கொள்ளலாம் அளவு கொண்ட பின்னரும், குவிந்து கிடக்கும் பொருள்கள், பகைவர்க்குப் பயன்படாமை கருதிப் பாழ் செய்துவிட்ட விளைகிலங்களையும், வீரர் பலர் கூடிக், கூரிய கோடாலி கொண்டு வெட்டி வீழ்த்தினமையான் பாழான பகைவர் காட்டுக் காவற்காடுகளையும், ஊர்தேன்றும் உள்ள மனே