பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாண்டியர்

இவன் காலத்தே நிகழ்ந்த கடல்கோளால், பாண்டி நாட்டி ன் பெரும் பகுதியாய பஃறுளியாறும், பன்மலையடுக் காகிய குமரிக்கோடும் அழிந்து போகவே, அவ்வாறு அழிக்க தன் நாட்டிற்கு அளவான காட்டை, வட பகுதி யில் வென்று ஆண்டான் இப் பாண்டியன் ; அவ்வாறு இவன் வென்று ஆண்ட நாடு, இமயமும், கங்கையுமாம் என்ப இளங்கோவடிகள் ; சோணுட்டு முத்தார்க் கூற்ற மும், சேரநாட்டுக் குண்ர்ேக் கூற்றமும் ஆம் என்பர், சோழன் கல்லுருத்திரனும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும்.

'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும், இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி.”

(சிலம்பு, கக : க.க - உ.உ)

"மலிதிரை ஊர்ந்துதன் மண்,கடல் வெளவலின்,

மெலிவின்றி மேற்சென்று மேவார்கா டிடம்படப் - புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை. வவியிஞன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்.”

(கலித்தொகை : கலச க - ச)

" அங்கனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லை யிலே முத்தார்க் கூற்றமும், சோமானுட்டுக் குண்ர்ேக் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த காட்டிற்காக வாண்ட தென்னவன்.' -

(சிலம்பு : கள - உஉ உரை)

இக் கடல்கோள் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தன் நாட்டு எல்லையை அரசர்க்கு உணர்த்த விரும்பிய நெடியோன், கடலைத் தன் காலால் மிதித்து உணர்த்தினமையாலும், அக்கடல்நீர் சுவற வேல் எறிக் தமையாலும் வெகுண்ட கடல், அவன் காட்டை அழித் தது; அதனல் சினம்கொண்ட செழியன், அவ்வாறு அழிக்கக் கடற்கு ஆணதந்த இந்திர்ன் முடிமீது வளே