பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 93

முதுகுடுமி, வேதநெறி கின்று வேள்விபல இயற்றிய வன் ஆவன் ; புலவர் நெட்டிமையார், "வேந்தே பகைவர் தேயம் பாழ்படச் செய்யும் சின் போற்றலை அறிந்தும், கூரிய படைக்கலம் பல கொண்ட சின் துாசிப்படையினே அழித்துப் பெறும் வெற்றியில் ஆசையுடையவராய் வந்து, அவ்வாசை நிறைவேறப் பெருமல் அழிந்து, மானம் இழந்து வாழும் சின் பகைவர்களின் எண்ணிக்கை அதி கமோ ? அல்லது, அற நூல் கூறியவாறு, வேதநெறி கின்று, சமிதையும், பொரியும், நெய்யை மிகப் பெற்றமை யால் எழுந்த புகை மேன்மேலும் கிளர்ந்து எழுமாறு, பல்லாற்ருனும் சிறந்த வேள்விகளே முடித்து, நாட்டிய வேள் வித் தூண்களின் எண்ணிக்கை அதிகமோ ? இவற் மறுள் எதுவோ அதிகம் எனக் கேட்டுப் பாராட்டுவதால் இது விளங்கும்.

'ஒண்படைக் கடுந்தார் முன்புதலேக் கொண்மார்

கசைதா வந்தோர், ஈசைபிறக்கு ஒழிய, வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் ? புரையில் கற்பனுவல், நால் வேதத்து, அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை கெய்ம்மலி ஆவுதி பொங்கப், பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல் ? யாபல சொல்லோரி பெரும!” (புறம்: கடு)

கி. பி. 765 முதல் 790 வரை அரசாண்ட நெடுஞ் சடைய பராந்தக பாண்டியளுல் பிறப்பிக்கப்பட்ட வேள் விக் குடிச் செப்பேடுகள், பாகனூர்க் கூற்றம் எனும் வளங் கொழிக்கும் நாட்டிஜா கால்வேத நெறியறிந்தார்பால் ஓதி உணர்ந்தோணுய, கொற்கையைச் சார்ந்த நற்கொற் றன் என்பான் எடுத்த வேள்விக்களம் போத்த முது குடுமிப் பெருவழுதி, அவ் வேள்வி நிகழ்ந்த ஊரை, வேள்விக்குடி எனப் பெயரிட்டு, அவனுக்குரிமையாக்கித் தந்தான்் எனச் செப்புகின்றது.