பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாண்டியர்

அவன், பக்க நாடுகளோடு பகைகொண்டு வாழ்வதே வழக்கமாகக் கொண்ட தன் முன்னுோைப் போலாது, அங் நாடுகளோடு, அன்புகொண்டு வாழும் அறிவுடைய குயின்ை: வழுதி, தன் காலத்தே, சோணுட்டாசணுய் விளங்கிய, குர்ப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனு டன், பிரித்தலறியாப் பெருநட்புடையணுயினன். வேங் தர்கள், வேற்றுமை ஒழித்து, ஒற்றுமைகொண்டு உலகாள மாட்டாரா என ஏங்கிக் கிடந்த புலவர்கட்கு, இவ் ஒற்று மைக் காட்சி, பெரு மகிழ்ச்சி அளித்தது ; அவர்கள் எப் போதும், இவ்வாறே ஒற்றுமை உடையாயின், அவ ரையோ, அவர் நாட்டையோ அழிப்பார் எவரும் இாார் ; அதற்கு மாருக, இவர் எண்ணிய நாட்டில், இவர் அரசு நடைபெறும் என்பதை உணர்ந்து புலவர்கள் இவ் விருவர் தம் ஒற்றுமையை உறுதுணை பாக் கொண்டு, கமிழகத்திற் குப் புறத்தே உள்ள நாடுகளில் எல்லாம், தமிழ்க்கொடி பறத்தலைப் பார்த்து மகிழப் பேருள் ளம் கொண்டனர்; அம் மகிழ்ச்சிக்கிடையே ஒரு பேரச்சமும் அவர் உளத்தே எழுந்தது ; தமிழ்வேந்தர்கள், தம்முள் ஒற்றுமைகொண்டு விடுவராயின், தமிழகம் கழைக்கும்; தமிழரசு வாழும்; தமக்குக் கேடு உண்டாம் ; இவ் வெண்ணம் உடையாய பகைவர், அவ் வேந்தர்களிடையே ஒற்றுமை குலைந்து பகைவளர வழிசெய்யவும் செய்வர் ; அதற்கு அவர்கள், அவ் வேந்தர்களிடையே, அவர்க்கு நண்பரைப் போலவும், நல்லன தேடுவார் போலவும், முன்னேர் நெறிமுறையினே முன்னின்று உரைப்பார் போலவும், பழகிப் பாழ்.கரும் உரைகளைப் பக்குவமாகக் கூறித் தம் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்வர் என்பதை அப் புலவர்கள் அறிவர்; ஆகவே, இவ்விருவர்தம் ஒற்றுமை கண்டு உவத்தலோடு நில்லாது அவர்க்கு, அவர் கூடியிருத்தலால் அவர்க்கும், அவர்தம் நாடாம் கமிழகத்திற்கும் உண்டாம் ஆக்கங்களை எடுத்துக் கூறுவதோடு, அவ்வொற்றுமை கெடுக்கப் பகைவர் முன்வருவர் ; அவர்கள் நண்பரைப் போலவும், நன்னெறி காட்டுவார் போலவும், முன்னேர் வழிச் செல்ல முன் வருவார் போலவும் தமிழரசர்க்குக் கேடும்