பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 109

தமக்கு ஆக்கமும் உண்டாம் உள்ளத்தராய் உரைப்பர் ; அவரிடத்தே விழிப்பாயிருத்தல் வேந்தர்க்குக் கடனும்’ என, அறிவுரை கூறவும் முன்வந்தனர்; அவ்வாறு உறுதி யளிக்கும் உயர்மொழி அளித்த புலவருள், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர் கூறிய நல்லுரைகளைச் சோழர் தலைநகர் சென்று, தங்கியிருந்த வெள்ளியம்பலத் துத் துஞ்சிய பெருவழுதியும் விரும்பிக் கேட்டுப்பொன்னே போல் போற்றினன் : அன்று அவன் கேட்ட நல்லுரை இது :

"பாணிற உருவிற் பனைக்கொடி யோனும், னிேற உருவின் கேமியோனும் என்று இருபெருங் தெய்வமும் உடன்கின் ரு அங்கு உருகெழு தோற்றமொ டுட்குவா விளங்கி, இன்னி ராகலின், இனியவும் உளவோ ? இன்னும் கேண்மின்,தும் இசைவா ழிய்வே , ஒருவீர், ஒருவீர்க்கு ஆற்று கிர் ; இருவரும் உடனிலே திரியீ ராயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்த இப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே ;

அதனல், நல்ல போலவும், தயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காதல் நெஞ்சினும் இடைபுகற்கு அலமரும் எதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, இன்றே போல்ச நம் புணர்ச்சி ; வென்று, வென்று அடுகளத்து உயர்க நூம்வேலே , கொடுவரிக் கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய வாக,பிறர் குன்றுகெழு நாடே.’ (புறம் : இ.டி)