பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சேரர்

இடங்களையும் மாறி மாறி அகழ்ந்தும் ஒன்றும் கிடைக்கா மையால் மடிந்து வீழ்ந்திருக்கும்; அவர் இளைய மகன், பாலுண்ணவேண்டி அவன் தாயிடத்தே பலகாலும் செல்லவும், உணவுண்டு பல நாளாகிய காணத்தால் ப்ரல் சுரத்தல் கின்ற அவளிடத்தில், பால் இன்மையறிந்து, பாலுண் வேட்கையினேயே மறந்துவிட்டான் ; இவ்வாறு வறுமையில் வாடிப் பலநாள் வாழமுடியாது; யாண்டேனும் சென்று பொருள் பெற்று வருதல்வேண்டும் என்று முடிவு கொண்டார் பெருங்குன்றார்கிழார் ; உடனே தாம் வேண்டும் பெரும்பொருள் கொடுக்க வல்லோன் சேர நாடாள் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையே என உணர்ந்து, ஆண்டடைந்து இரும்பொறையைக் கண்டார் ; 'முரசெழுந் திரங்கும் தான்ேயொடு கலைச்சென்று அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்!” என்றெல்லாம் பாராட்டிப் பாடி நின்றார்; இரும்பொறையும் அவர் பாடற் பொருளுணர்ந்து வியந்து இன் புற்ருன் ; பெருங்குன்றுார் கிழார், அவன் சிறந்த பரிசில் அளித்து விடுப்பன் என எண்ணியிருந்தார்; அவனும், அதற்கேற்ருற்போல், பரிசில் நல்குவான் போலும் செயல்கள் சில மேற்கொண்டான் ; நாள் பல கழிந்தன ; ஆணுல், அவன் பரிசில் ஒன்றும் அளித்தான்ல்லன்; புலவர், ஏமாற்றமும் வருத்தமும் கொண்டார்; வருங்கிய அவர் உளத்தினின்றும் வெடித்தன சில சொற்கள் :

அரசே! நீ தரும் பரிசில் பெறும் விருப்பால் வந்தோருள் யானும் ஒருவன் , வள்ளன்மைக் குணம் வாய்க்கப்பெற்ருேன் நீ எனக் கருதியே, புலவர்க்குப் பரிசில் தர மறுக்கும் பழியுடையோர் செயலை நின்பால் உரைத்தேன் ; கொடுப்போன் போல் காட்டிக் கொடாது ஏமாற்றிவிட்டனே பாடிய புலவன் வறுமையால் வாடுகின் றனனே என்ற நாணம் கினக்கு உண்டாகவில்லை; யானே, நீ காணுமாறு பல முறை பாராட்டினேன் கின்னே ; என் பாடல் கேட்டு மகிழும் கின்னே வணங்கி விடை பெறுமுன் , ஒன்று கூறுகின்றேன் கேள், வாயில் வந்து கிற்போர்க்கும்,