பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக் காலத்தே நம் தமிழகத்தை அரசியல்முறை பிறழாது ஆண்ட முடியுடை வேந்தர்கள் மூவரும், வள்ளல் களும், குறுநில மன்னர்களும் பற்பலாாவர்.

பழந்தமிழக மாண்பை நம் தமிழ்மக்கள் அகக்கண் முன் நிறுவியுணர்த்த எண்ணி, எம்மால் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையாக க முதல் கசு வரை தனித்தனி நூலாக வும், அவைகளைத் தொகுத்த தொகை நூலாகவும் ஆக்கி வெளியிட்டுள்ளோம்.

அம்முறையைப் பின்பற்றிச் சங்ககால அரசர்களின் வரலாற்றை உணர்த்த எண்ணிச் சங்ககால அரசர் வரிசை யென க முதல் சு வரை தனித்தனி நூலாக ஆக்கி வெளி வந்துள்ளன.

அவற்றுள் சேர,சோழ, பாண்டியர் தம் வரலாறு கூறும் பகுதிகள் மூன்றையும் ஒரு தொகுதியாகவும், வள்ளல்கள், அகுதை முதலிய நாற்பத்துநால்வர், திரையன் முதல் இருபத் தொன்பது பேர் அடங்கிய மூன்று தனித்தனி நூல்களையும் ஒரு தொகுதிகளாகவும் தொகுத்து, சங்ககால அரசர் வரிசை தொகுதி க, சங்ககால அரசர் வரிசை தொகுதி உ என்னும் பெயர் அமைத்து அழகிய கட்டடஞ் செய்து வெளியிட்டுள்ளோம். அவற்றுள் இது முதற்ருெகுதியாகும்.

சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை நூல்களை வாங்கிக் கற்று அருஞ்சுவையுணர்ந்த கந்தமிழ் மக்கள், இவ்விரு தொகுதி களையும் வாங்கிக் கற்று நற்பேறு பெறுவார்களென. நம்பு, கின்ருேம்.

சைவசித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தார்.