பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சேரர்

முரசும், குடையும், கலனும் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் துகள் தீர் மகளிர் இாங்கத் துப்பறுத்துத் தகடூர் எறிந்து நொச்சி தந்து எய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சோல் இரும்பொறை.”

(பதிற்றுப்பத்து, பதிகம் : அ) பெருஞ்சேரல் பெற்ற வெற்றிகளுள், புலவர் பாராட்டும் பெருமைவாய்ந்த மற்றொரு வெற்றி, அவன், கழுவுள் என்பானேப் பணியவைத்ததே ; கழுவுள் என்பான் ஒர் ஆயர்குலத் தலைவன் ; அரிய அரண் ஒன்றும் உடை யான் ; பேராசரோடு பகைகொண்டு போருடற்றும் இயல் பினன்; அவன் ஆணவம் அறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை, தன் படைவீரரைக்கொண்டு அவனைப் பணிய வைக்க விரும்பினுன் , இவன் படைவீரரும், அவ்வாறே அவன் அரணேத் தாக்கி, அவன் நாட்டு ஆயர்பலர்க்கும் உரிய ஆனிரைகள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர்; கழுவுள், பெருஞ்சோலிரும்பொறையின் படைவீரரை எதிர்த்து கிற்கலாற்ருளுய், அஞ்சி ஒடி, அானுட் புக்கு அடங்கி வாழலாயின ன் , தம் தலைவன், தம் ஆனிரைகளே மீட்டுத்தாரான் என அறிந்த ஆயர், கன்ருேடுகூடிய பசுக் கள் பலவற்றைப் பெருஞ்சோல் படைத்தலைவர்க்கு அளித் துப் பணிந்து கின்றனர். படைத்தலைவரும் அவர் அளித் தன எற்று, அவர்தம் ஆனிரைகளே அவர்பால் ஒப்படைத் தனர்; தன்னுட்டு ஆயர்செய்தன அறிந்த கழுவுள், * இனி வேறு செய்வதற்கில்லை ; தான்ும் பணிந்துபோதலே தக்கதாம் ' என உணர்ந்தான்் ; ஆயினும், பலர் அறியச் சென்று பணிந்து சிற்றலை நாணிற் று அவன் உள்ளம் ; ஆகவே, எவரும் அறியாவண்ணம், விடியற்காலத்தே பால் கடையுங்கால் தோன்றும் ஒலி, ஊரில் எழுதற்கு முன்பே, மறைந்துசென்று பணிந்து கின்ருன்.

' குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில் ஆரெயில் தோட்டி வெளவினை; ஏருெடு கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து