பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட எல்லேயமைந்த z? தமிழகத்தை ஆட்சிசெய்த முடியுடைவேந்தர் மூவராவர். அவர் சேர சோழ பாண்டியர் எனப் பெறுவர். இவருள் முதற்கண் வ்ைத் துப் பண்டுதொட்டே வழங்குதற்குரியோர் சேர் வேந்தர் ஆவா. 辑

இச் சேரர் கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த வீரக்குடியினாாவர். இவர் அறமும் மான மும் ஆட்சித்திறலும் கல்வி கேள்விகளும் ஒருங்கே அமைந்த ஒண்மையாாவர்; இவர்தம் பெருமையை மிக்கெடுத்துக் கூறுவன சங்ககாலத் தமிழ் நூல்கள். -

செல்வப் பெருக்கம், வீரப்பெருக்கம், கல்விப் பெருக்கத்தில்" முன்னணியில் விளங்கும் இப்பெருவேந்தர்கள், அத்துவஞ்சோல் இரும்பொறை முதலாக, வஞ்சன்: ஈருக இருபத்தைவராவர். இவர்தம் அரிய வரலாற்றைப் பழந்தமிழ் நூல்களின் து கொண்டும், கல்வெட்டுக்கள், பேர்றிஞர்கள் ஆய்வுநூல்களின் அகச்சான்றுகள் கொண்டும், தம் கூர்த்த மதிநலத்தால் திரு. புலவர், கா. கோவிந்தன் எம்.ஏ. அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள்,

ஏற்கெனவே, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை க முதல் கசு வரை அவர்கள் எழுதித்தந்து அவைகளைத் தனித்தனி நூல் களாகவும், இரண்டு மூன்று சேர்ந்த தொகுப்பு நூல்களாகவும் செப்பஞ்செய்து அழகியதாகக் கட்டடங்கிட்டி நூலுருவாக்கி வெளிப்படுத்தியுள்ளோம். - -

இதுகாலை அம்முறையில் 'சங்ககால அரசர் வரிசை' என்று துவங்கி, முடியுடை வேந்தர்களான சேர சோழ பாண்டியர் வா லாறுகளையும், ஏனைய குறுநில மன்னர்கள் வரலாறுகளையும் தனித் தனி ஆறு நூல்களாக வெளியிட எண்ணிச், சங்ககால அரசர் வரிசையில் முதலாவதாகச் சேரர்? என்னும் பெயாமைத்து இந்நூலே வெள்யிட்டுள்ளோம். இதனை அடுத்து அடுத்துச் சோழர், ப்ாண்டியர், குறுநில மன்னர் வரலாறுகளும் வெளியிடப்பெறும்.

அருங்கலேச் செல்வரும், ஆய்புல ஆறிஞரும், கவிஞரும், கணக்காயரும், மாணவரும், தமிழ்கலம் பேனும் தகைமையாள ரும், பிறரும் வாங்கிக் கற்றுப் பழந்தமிழ் மன்னர்கள் ஆாண்பை யும், அவர்தம் அரும்பெறல் ஆற்றல்களையும் அறிந்து இன்புற்று

எவ்வழி நல்லர் ஆடவர், அவ்வழி நல்ல வாழிய நிலனே' என, நம் தமிழகத்தை வாழ்த்தி வளம்பெற்ருேங்க வேண்டுகின்ருேம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.