பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விச்சிக்கோன் 97 னன் வழிவந்த பழியுடையது அவன்குடி, தம்மலை நோக்கி வந்து வாழ்த்தி கின்ற புலவரை வணங்கி வரவேற்று வேண் வே அளித்து அனுப்பாது, அவர்க்கு வாயில் அடைத்தான் ஒருவன் வாழ்ந்த வழுக்குடையது அவன்குடி இப்பழி யுடைமையால், இவன் உடன் பிறந்தான், புலவர் ஒருவரால் புறக்கணிக்கவும் பெற்று ளான். அவனும், அவன் நண் பன், இளங்கண்டிாக்கோவும் ஒருங்கிருக்க வந்த புலவர் பெருத்தலைச் சாத்தனர் இளங்கிண்டிரக் கோவை மட்டும் அன்பொழுகத்தழுவி விட்டு, இளவிச்சிக் கோவைத் தழு வாதே சென்ருர். பிறக்ககுடி பழியுடையதே. எனினும், அக் குடியிற் பிறந்த இவர்கள் பழியுடையா சல்லர். குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கினன் விச்சிக்கோ, பாரி இறந்தானுக, அவன் மகளிர்க்கு மணஞ்செய்துவைக்கும் பணியேற்றுக் கொண்ட கபிலர், அம்மகளிரையும் அழைத்துக்கொண்டு, விச்சிக்கோன் அவைக்கு வந்துசேர்ந்தார்; பாரிமகளிரை மணந்துகொள் ளும் மாண்புடையான் அவன் என்று எண்ணினர் கபிலர்: உடனே, அவனே அடுத்து, 'விச்சியர்கோவே! இம் மங் கையர் இருவரும், முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளியோன் மகளிர்; யான் ஒருபரிசிலன்; மேலும் ஒர் அந்தணன்; கேட் கவும், கொடுக்கவும் உரிமை உடையேன்; இவரை மணந்து கொள்ளத்தக்க மாண்புடையான் நீ ஆகவே இவர்களே யான் தா, ஏற்று மணந்து மகிழ்ந்து வாழ்க!” என்று வேண்டினர்; ஆல்ை, பேரரசர் மூவர்க்கும் பகைவயை பாரியின் மகளிரை மணந்தால், அம் மூவேந்தர் பகைப்பர் என அஞ்சியோ, அம் மகளிரின் சீரழிந்த செல்வகிலே கண்டு நாணியோ, அவரை மணக்க மறுத்து விட்டான். 'வில்கெழு தானே விச்சியர் பெருமகன் வேக்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலிசோக் குறழ்கிலே கண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பிலும் பெரிதே.”