பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திரையன் - வேளிர்பலர் பெரும் பொருள் சேர்த்து வைத்துப் பாதுகாத்து வரும் பாழி நகர்க்கு உரியோனும், தன் தோட்டத்துப் புனல் தந்த பசுங்காய் ஒன்றைத் தின்ற தன் கப்பிற்காக ஒரு பெண்ணைக் கொலைபுரிந்த கொடும்ை யுடையோனுமாய நன்னனுெடு பகைகொண்டிருந்தனர் கோசர், அதனுல், அவன் காவல்மரமாகிய மாமரத்தை வெட்டி த் தம் நாட்டிற்குக் கொண்டு சென்றதோடு அமை யாது, அந் நன்னனுக்குரிய பாழிப் பறந்தலையில், அவன் நண்பன் மிஞ்லி என்பாளுெடு போரிட்டு, வெளியன் வேண் மான் ஆஅய் எயினன் என்பான் இறந்தாகை, அது கண்டு ஆற்ருத அழுத அவன் உரிமை மகளிர் துயமைப் போக் கினமையால், அந் நன்னன் பகையினே எற்றுக்கொண்ட அகுதை என்பானே, அந் நன்னன் அழிக்காவாறு காவல் செறிந்த இடத்தே வைத்தும் காத்தனர் கோசர்.

  • நன்னன்

நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர்.” (குறுங் எங்) " அஃதைப் போற்றிக் - - காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்." (அகம்: க.க.க.) தம்மொடு பகைப்பார் அனைவரையும் அழிப்பதையே தொழிலாகக் கொண்ட கோசர், இறுதியில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் படை யாள சாகிப் பணிபுரிவாராயினர்; பாண்டியர் படையில் பணி யாற்றம் கோசர்க்கு, மோகூர்க்குரியோனும், பழையன் என அழைக்கப் பெறுவோனுமாய மாறன் என்பான் படைத்தலைவனுய் விளங்கினுன்; பழையன் மாறன், பாண் டியர் படைத்தலைவனுய், கோசர் பெரும்படையோடு, பாண்டியர் தலைநகராம் கூடன்மாநகரைக் காத்திருந்த காலை, வெள்ளம்போல் பரந்த பெரும்படையுடைய கிள்ளி வளவன், கோசர்படையைக் கொன் ற, கூடல்நகரைக் கைக்கொள்வான் எண்ணிக் கூடலை வளைத்துகின்று பெரும் போர்புரியத் தொடங்கின்ை.