பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 115 நன்னன் பேராற்றலையும், வெள்ளம்போற் பரந்த பெரும்படையுடையயை கிள்ளிவளவனையும், வடுகர் முன் லுற வந்தெதிர்க்கும் மோரியர்தம் தேர்ப்படையையும் பாழாக்கவல்ல போற்றலுடையதாய கோசர், அப்பேராற் றலைப் பேணிக் காத்தற்பொருட்டு, இடைவிடாப் போர்ப் பயிற்சி மேற்கொண்டிருப்பர்; கோசர் பெருவீரராய் விளங் கினர் என்பதை அறிவிக்கும் பழந்தமிழ்ப் பாக்களே, அவர்கள் போர்ப்பயிற்சி பெறும் முறையையும் விளங்கக் கூறுகின்றன; படைக்கலம் பயிலும் இளங்கோசர் பலர் கூடிச் சென்று, தம் பயிற்சிக்குத் துணையாக, முருக்க மாத்தான் இயன்ற இலக்கு அமைத்து, அதன் மீது தம் படைக்கலங்களைப் பலகாலும் எறிந்து எறிந்து பயிற்சி பெறுவர் என்ற செய்தியைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர் அறிவித்துள்ளார் : வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலினர் எறிந்த அகலிலே முருக்கின் பெருமாக் கம்பம்.” (புறம்: க.சு.க) கோசர் வரலாறு குறித்துப் பழந்தமிழ்ப் பாக்கள் கூறுவன இத்துணையவே. இவர் வரலாருகப் பிறவும், பிற. ரும் கூறுவன அணுகி ஆராய்தற்குரிய தொன்ரும்.