பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டையர் 117 காலத்தால் கரிகாலனுக்குப் பிற்பட்டோன் எனக் கருதப்பட்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய புலவர் தாயங்கண்ணனர், தொண்டையோரைப் பற்றிக் கூறியுள்ளார்; தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனேப் பாராட்டிய காரணத்தால் கரிகாற் பெருவளத்தானுக்குப் பிற்பட்டோராகத் தோன்றும் கல் லாடரும் அத்தொண்டையோரைத் தம் குறுந்தொகைப் பாட்டொன்றில் குறிப்பிட்டுள்ளார்; அதியமான் பொருட் த்ெ தொண்டைமானுழைத் தாதுசென்ற ஒளவையார், பாணருக்குப் பிற்பட்ட காரணத்தால், அவரும் கரிகாற் பெருவளத்தான் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தவரே; வேங்கட மலையையும், அதைச் சூழவுள்ள நாட்டையும் ஆண்டுவந்த திாையனேயும், அவனுக்குரிய ஊர்களுள் ஒன்ருய பவத்திரியையும் அகப்பாட்டொன்றில் அமைத் துப் பாராட்டிய காட்ர்ேகிழார் மகளுர் கண்ணஞரும், 'செல்லா நல்லிசைப் பொலம்பூண் கிரையன்' எனத் திரையனப் பாடிய நக்கீரரும், கரிகாற் பெருவளத்தானுக் குப் பிற்பட்டோரேயாவர்; ஆக, இவ்வாறு, தொண்டையர் என்ற மரபினரையும், அம்மாபில் வந்தோராய தொண்டை மான், கிாையன் என்பாரையும் பாராட்டிய புலவ ரெல்லாம், கரிகாற்பெருவளத்தான் காலத்திற்குப் பிற்பட்டோராகவே தோன்றலின், அத்தொண்டையர் மரபு, தமிழ்நாட்டில் தோன்றியது, அக் கரிகாலனுக்குப் பின்னரே எனக் கொள்க.