பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திரையன் நாடு நலமெலாம் பெற்று கனிசிறந்து விளங்க நாடாண்ட நல்லோனுய திரையன் வரலாற்றினே விளங்க உணரும் வாய்ப்பு வாய்த்திலது; அவன் நாடு, அந் நாட்டு வளம், அவன் ஆட்சித்திறம் ஆகியவற்றை விளங்க விரித் துரைத்த புலவர்களும், அவன் வரலாற்றினே விரித்துரைத் தாரலலா, . திரையன், திருமாலை முதல்வனக் கொண்ட குடியிற் பிறந்தவன் , திரைதரு மரபின் வழிவந்தவன் ; கிரையன் எனும் பெயருடையான் ; சேர, சோழ, பாண்டியர் மூவரி லும் சிறந்தவன் ; கடலிற் பிறந்த வளைகள் பலவற்றுள் ளும் வலம்புரிச் சங்கு சிறந்ததாதல்போல், அரசர் அனேவ சிலும் சிறந்தவன் : அல்லது கடிந்து அறம் விளங்க நாடாண்டவன்; வேற்படை பல வுடையான். நீர்ப் பேர் எனும் பெயருடையதொரு பேரூர் இவனுக்கு உரித்து. காஞ்சியைத் தலைநகராக் கொண்டு காவல் மேற்கொண்ட வன். யானைகள் கொணரும் விறகினல் வேள்வி வேட்கும் அந்தணர் கிறைந்த வேங்கட மலையும் அவன் ஆட்சிக்குட் பட்டதே. பகைவர் பணிந்து கிறைதா முன்வரினும் அதை ஏற்றுக்கொள்ள எண்ணுராய், அவரை அழித்து அவர் பொருள் அனேத்தையும் கைப்பற்றி உண்னும் ஆற்றல் வாய்ந்தவர். தன் பாட்டுடைத் தலைவன் திரையன் வரலாருகக் கடியலூர் உருத்திரங்கண்ணனர் கூறுவன இத்துணேயவே. "இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அங்கீர்த் திாைதரு மரபின் உாவோன் உம்பல் : மலர்தலே உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு கானை மூவருள்ளும் இலங்குர்ேப் பாப்பின் வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின், அல்லது கடித்த அறம்புரி செங்கோல், பல்வேல் திரையன். (பெரும்பாண்: உக-எ) 'நீர்ப் பெயற்று వావజు GLrఇ.” (டிை கூகக)