பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரையன் 9 'கச்சி யோனே கைவண் தோன்றல்.” - (பெரும்பாண் : சஉ0) "பகைவர், கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது, வினையுடம் படினும், ஒன்றல் செல்லா, உாவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக.” - (டிை ச0ே-ச) 'செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கு அருவிய மலைகிழவோனே.” - (டிை. சகஅ-இ00) திரையன் வரலாறு குறித்துப் பல்வேறு கருத்துக் களைக் கூறுவர் ஆராய்ச்சியாளர். நாகபட்டினத்திச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான்பெற்ற புதல்வனே என்செய்வேன் என்ற பொழுது, தொண் டையையே அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமையை எய்து வித்து நாடாட்சி கொடுப்பல் என்று அவன் கூற, அவளும் புதல்வனே அங்ஙனம் வாவிடத் திரைதருதலின் திரையன் என்று பெயர் பெற்ருன்,” என, நச்சிர்ைக்கினியர் கூறும் செய்திகளை ஏற்றுக்கொண்டு, அச் சோழன் கிள்ளிவளவ வைன்; நாககன்னி பீலிவளேயாவள் என்று கொள்வர் சிலர். பல்லவன், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அர மகள் ஒருத்திக்கும் பிறந்தவனுவன்; அசுவத்தாமன், துரோணரின் மகன்; துரோணர், கங்கை நீரிற் பிறந்தவ ளாய 'க்ருதாசி' என்ற ரோமகளுக்கும், பாரத்வாஜ மு வருக்கும் பிறந்தவர். இதனல், பல்லவர், திரைதரு மகளிர் மரபினராதல் தெளிவாம்; இப்பல்லவரைக் குறிக்க வழங் கும் தொண்டையர் என்ற பெயரின்கண்வரும் தொண்டை என்ற சொல், துரோணம் என்ற சொல்லின் மரூஉ முடி பாம் என்று கூறித் திரையன் வரலாறு குறித்து கச்சி ஞர்க்கினியர் கூறியதை மறுத்து வேறு கூறுவர் சிலர்: