பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் சேய் நன்னன் 19 கிறது. இம்மலையில், காரியுண்டிக் கடவுள் என்ற கிரு காமம் கொண்ட சிவபெருமான் திருக்கோயில் கொண் டுள்ளார். அம்மலைக்கு இக் காலத்தே வழங்கும் பெயர், கிரிசூலகிரி, பர்வதமலை என்பன; ஆங்குறை இறைவனுக்கு இக் காலத்தார் வழங்கும் திரு நாமம் காளகண்டேசுவரர் என்பது; இம்மலை திருவண்ணுமலைக்கு வடமேற்கில் உளிது. - - கன்னன் நாட்டில் பாய்ந்தோடும் ஆறு சேயாறு; இச் சேயாறு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சவ்வாது மலை யிடத்தே தோன்றிச் செங்கம், திருவண்ணுமலை, போளுர், ஆாணி, செய்யாறு முதலிய வட்டங்கள் வழியே ஒடிச் செங்கற்பட்டிற்கு அருகே, பாலாற்ருேடு கலந்து விடுகிறது. அவ்யாற்றிற்குச் சண்முக நதி என்பதும் ஒரு பெயர் உண்டு; சிவமகளுர் கொண்டு வருதலால் சேயாறு எனப் பெயர் பெற்றது என்பர் சிலர்; வேறு சிலர், சேய் எனச் சிறப் பிக்கப் பெறும் முருகன் அருளால் வந்த, ஆ.மு. ஆதலின், அப் பெயர் பெற்றது என்று கூறுவர். குயவன் திகிரி போலும் சுழல்களைக்கொண்டு ஒடிவரும் வெள்ளக் காட்சி காண்பார்க்கு இனிய காட்சியாம் எனப் புலவர் போற்றுவர் சேயாற்றை. - - வேண்கலத் திகரியிற் குமிழி சுழலும் துனைசெலல் தலேவாய் ஒவிறந்து வரிக்கும் கானுநர் வயாஅம் கட்கின் சேயாறு.” 'நெடுவரை இழிதரும் நீத்தம் சால் அருவிக் கடுவாற் கலுழிக் கட்கின் சேயாறு.” ... ** - (மலைபடுகடாம்: சஎச-சு: நிதிச-டு) நன்னன் இருந்து அரசாண்ட தலைநகர் செங்கண்மா. மலைபோல் உயர்ந்து வாகனத்திண்டும் மதிலையும், அம்மதிலை படுத்த முதலைகள் வாழத்தக்க ஆழமும், நீர் அருமையும் உடைய அகழியையும் கொண்ட செங்கண்மா, சீரிய, பெரிய அங்காடிகளையும், ஆறுபோல் அகன்ற பெரிய தெருக்களையும், அடைந்தார் அறிவை மயக்கும் குறுக்