பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன்சேய் நன்னன் 21 “...... துணைபுணர் கானவர் இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் அடுக்கல் மீமிசை” தேனினர், கிழங்கினர், ஊனர் வட்டியர் கானவர், செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே, இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடு: கஎ-கக-கடுஉ-எ) ம்லையைச் சேர்ந்த சிற்றார்களில் வாழும் குறவர்கள், தம் ஊர் நோக்கி வருவார், நன்னனை நாடிச் செல்லும் பரி சிலராவர் என்பதை அறிவராயின், அவரைத் தாம் வேறு, அவர் வேறு என எண்ணுது, தமரேபோல் மதித்துத் தம் மால் ஆவன எல்லாம் அளித்து அகமகிழ்வர்; ஆண்டுச் செல்வார், அன்னர் இல்லங்களுள், தம் இல்லங்களுள் அழைவதேபோல் கில்லாது நுழைதலும், அவ்வில்லுறை பொருள்களைத் தம் பொருள்களேபோல் பயன் கோடலும் கூடும்; ஆண்டுவாழ் குறவர்குல மகளிர், ஆண்டுவரும் புதி யரை, அண்ணன் எனவும், அம்மான் எனவும் தம்மக்கட்கு முறைகூறி, நம்பால் அவரை அனுப்பி, அழைத்து விருந் தேற்றுப் போற்றுவர்; அன்னர் காட்டும் அன்பில், நன்ன னேப் பாடிச் செல்லும் பரிசிலர், அந் நன்னனே நாடிச் செல் அலும் தம் எண்ணத்தை மறத்தலும் கூடும். 'சிலம்படைக் கிருந்த பாக்கம் எய்தி, நோனச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நம்மில் போல சில்லாது புக்குக் கிழவிர் போலக் கேளாது கெழீஇ' - “குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி அகமலி உவகை ஆர்வமொடு அளைஇ மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் செருச்செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப டேலும் உரியிர்’ - (மலைபடு: கசுஉசு; க.அக எ)