பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திரையன் அவன் நாடுவாழ் ஆயர்பாலும் அப்பண்பே நிகழும்; இடையர் வாழ் இல்லங்கட்குப் பரிசிலர் இராக்காலத்தே சென்று விட்டால், அவர்க்கு அக் காலத்தே உணவாக்கி அளித்தல் இயலாது என அறிந்த அவ்வாயர், தமக்கென வைத்திருக்கும் பாலையும், பாற்சோற்றையும் அளித்து அன்பு காட்டுவர். 'பல்யாட்டு இனநிாை எல்லினிர் புகினே, பாலும், மிதவையும் பண்ணுது பெறுகுவிர்” - (மலைபடு: சகசு-எ) நன்னன் தலைநகரிடத்தே வாழும் நகரமாந்தரும், அவன் நாட்டினும், காட்டினும் வாழும் மக்களைப் போன்றே நனிமிக நல்லவராவர்; தம் வீடுநோக்கி வந்தாரை விரும்பி வரவேற்று, விருந்தோம்பும் வேளாண்மை, அவர் பாலும் பொருந்தி யிருந்தது; நன்னனே நோக்கி வந்த பரிசிலர், ஊர்மன்றத்தே இருக்கக் காணும் அந்நகர் மக்கள், "இவர் கள் மிகச் சேய நாட்டினின்றும் வந்துள்ளனர்; வெல்லும் போர்வல்ல நம் நன்னன்சேய் நன்னனே நாடி வந்துள்ள னர்; மிகவும் வருந்திவந்துள்ளனர்; அளியர்” என்று எண்ணி முகமலர்ந்து நோக்கி, இன்னுரை பல வழங்கி ஒவ் வொருவர் ஒவ்வொரு நாளாக விருந்தளித்துப் பேணி, வழிநடை வருத்தத்தால் வந்த அவர் துயர்போக்கி அருள் செய்வர்; அன்னர் அருள் உள்ளத்தின் அழகினே என்னென் பது அரசன் எவ்வழி, அவ்வழி யன்ருே குடிகள் 'மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர், வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி வந்தோர் மன்ற, அளியர்தாம்; எனக் .. கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி விருந்திறை யவரவர் எதிர்கொளக் குறுகிப் பரிபுலம் பலத்த நம்வருத்தம் வீட.” - (மலைபடு: சகஉ-எ) இவ்வாறு நீர்வளமும், நிலவளமும் கிறைந்த நாடும், மனவளம் நிறைந்த மக்களும் உடையனய நன்னன் சேய்