பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் 29 'நன்னன் விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலை.” 'நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன்.” 'நன்னன் நன்னட்டு எழில் குன்றத்துக் கவாஅன்.” 'நன்னன் ஆய் பறம்பு.’ ‘பாழி யாங்கண் வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த அருங்கல வெறுக்கை.” (அகம்: கடு; கஎ; கடுஉ; களங், உடுஅ; டசக, கூடுசு;ங்.எஉ) பொன்படு கொண்கான நன்னன் நன்னட்டு ஏழிற் குன்றம்.” (நற்: க.க.க) 'கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறகுரல் நெய்தல் வியலூர்.” (சிலம்பு உஅ; க.க -டு) நன்னன் ஒரிடத்தே, நன்னன் உதியன்” என அழைக்கப் பெறுகிருன்; நன்னன் உதியன் அருங்கடிப் பாழி. (அகம்: உடுஅ). உதியன் எனும் சொல், மூவேந் தருட் சோரைக் குறிக்க வழங்கும் பெயராம்; அப் பெயர், நன்னன் பெயரோடு இணைந்து வழங்குவதாலும், நன்ன னுக்குரிய கொண்கானாடு, சேரநாட்டின் ஒருபகுதியாகக் கொள்ளப்படுதலாலும், நன்னன் யாதோ ஒரு வகையால், அச்சேரலோடு உறவுடையனவன் எனத் தெரிகிறது. "நன்னன் ஏற்றை, நறும்பூண் அத்தி” எனத் தொடங்கும் அகப்பாட்டால் (சசி). நன்னன் எனும் பெயருடையா ைெருவன், சோர் படைத்தலைவனுய் விளங்கினன் எனத் தெரிகிறது. அந் நன்னனே, இந் நன்னன்; அவர் படை யில் பணியாற்றியதினலேயே, இவனுக்கு உதியன்’ எனும் சிறப்புப்பெயர் உண்டாயிற்று, என்று சிலர் கூறுகின் றனர். சேரர் படைத் தலைவர் பலருள் ஒருவனுய்ப் பணி