பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் 37 மேலும், கோசர் படைத்துணையும் பெற்றவன்; அத்தகை யான், நன்னன் கொடுஞ்செயற்கேற்ற கண்டத்தை நன்ன அக்கு அளிக்க விரும்பிகுல், அதைத் தன் படை வலி கொண்டே செய்திருப்பன்; இத்தகு சூழ்ச்சிநெறி தேம்ே ஆற்றற்குறையுடையானல்லன். இவற்றையெல்லாம் ஒருங்குவைத்து ஊன்றி நோக்குவார்க்கு நன்னன் இறுமா அழிவு குறித்து அவர் கூறுவது, கட்டிவிட்ட கதையே யல்லால், வரலாற்றுண்மை உடையதன்று என்பது எளிதிற் புலனும். படைத்துணை புரியும் நண்பரை இழந்தும், பெண் கொலே புரிந்து பழியைப் பெற்றும், நன்னன் ஆற்றல் ஒரு பால்குன்ற, அவன் பகைவர் ஒருபால் வளர்ந்து கொண்டே வந்தனர்; பாழியும், பாரமும் பகைவர் கைப்பட்டமையா அனும், வாகை கிற்கும் வாகைப் பெருந்துறை, தன்னேக் காத்திருந்த எயினன் இறந்துவிட்டானுகவே, காப்பாற் அப் போனமையானும், நன்னன், கடம்பின் பெருவாயில் என்று அழைக்கப்பெறும் வாகைப் பெருந்துறை சென்று வாழ்வானுயின்ை; வாகைப் பெருந்துறை, சோகாட்டின் ஒரு பகுதியாம். ஆகவே, அக் காட்டை மீளவும் பெற வேண்டும் என்று சேரவேந்தன் பெரிதும் முயன்ருன்; ஒரு முறை பெரும்படையோடு போந்து, பெருந்துறையை முற்றிப் போர்செய்தான்; நன்னன், தன் போராற்றலால் அவனே வென்று துரத்தினன்; வேந்தனே வென்ற வெற்றிக் களிப்பால், நன்னன், தன் தலைநகரையடுத்துள்ள காட்டுட் புகுந்து, ஆண்டுள இயற்கைக்காட்சிகளைக் கண்டு இன் புற்று வாழ்ந்திருந்தான்; நாட்டில், நன்னன் இல்லாக் காலமே, தன் கருத்தினே முடித்துக் கோடற்கு ஏற்ற கால மாம் எனக் கருதிய சேரவேந்தன், மீளவும் வந்து, வாகைப் பெருந்துறையை வளைத்துக் கொண்டான்; அஃதறிந்தான் நன்னன்; உரிய காலத்தில் ஆண்டுச் சோவிடின், அந்நகரும் அானும் பகையரசனுக்குப் பணிந்துவிடும் என் எண்ணி ன்ை; உடனே விரைந்தான் வாகை நோக்கி. ஆண்டு வங்க