பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திரையன் யின் ஆற்றல்களைச் சிறுகச்சிறுக அழித்துக்கொண்டே, மோகூர்க் கோட்டையுள் அடங்கியிருந்தான் பழையன் ; மோரியர் படைக்குப் பணியாது கிற்கும் மோகூர்ப் பழைய அக்குப் படைத்துணே அனுப்புதல் தம் இன்றியமையாக் கடமை எனக் கருதினர் பாண்டியர்; பாண்டியர் படையுள், பேராண்மையுடைய கோசர் படை, மோகூர் வந்து சேர்ந்தது. பாண்டியர் அளித்த படைத்துணே பெற்ற பழையன், மோரியர் தம் தேர்ப்படையோடு கூடிய பெரிய படையை வென்று துரத்தினுன் ; மோரியர் முன்னி வந்தது முடியாது போயிற்று. பழையனே வாழ்த்தினர் புலவர்கள். ' வெல்கொடித் - துனைகா லன்ன புனை தேர்க் கோசர், தொன்மூ காலத்து அரும்பனைப் பொதியில் இன்னிசை முரசம் கடுப்பிகுத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையின் பகைதலே வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனேதேர் ாேமி உருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய அறைவாய்.” (அகம் : உடுக)