பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. பாணன் தமிழகத்தின் வடவெல்லைக்கப்பால் அரசமைத்து வாழ்ந்தாருள் பாணனும் ஒருவன்; பாணன், பகைவர் நாட்டு ஆனிரைகளை, அவ்வர்னிரைகளைக் காத்து சிற்பாரை வென்று கவர்ந்து வருவதில் வல்லவன் ; பால் பரந்த பாலை வழியை ஓசை எழர்வாறு இனிது கடத்தற்குக் காலில் செருப்பணிந்து செல்வன் ; செல்லும் இடம் சேய்மைக் கண்ணதாகலின், ஆங்கு வேண்டும் உணவை, மூங்கிற் குழாயிலிட்டு உடன்கொண்டு செல்வன். பகைவர் நாடு, தன் காட்டைச் சாராது, சேய்மைக்கண் உளதே எனச் சிங்தை கலங்குவதிலன்; ஆனிரைகளை வைத்துக் காவல் மேற்கொண்டிருக்கும் பகைவர் ஆனிரைகளே, ஏற்ற செவ் வியை எதிர்நோக்கியிருந்து தாக்கி, ஆண்டுள்ள ஆக்களை யும், ஆனேறுகளையும் கைப்பற்றிக் கொணர் தற்கேற்ற ஆற்றல் வாய்ந்த வேற்படையுடையவன்; தன் படை வீரர்க்குப் பெருஞ் சோறளித்து மகிழும் மாண்புடைய கைலின், அவன் தன் பகைவர்க்கு அஞ்சிப் புறங்கொடுத் தது என்றும் இலன். - ' கல்பொரு மெலியாப் பாடினேன் அடியன்; அல்கு வன்சுாைப் பெய்த வல்சியன் ; இகந்தன. ஆயினும், இடம்பார்த்துப், பகைவர் ஒம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் குவையிமில் விடைய வேற்ரு ஒய்யும் கனையிரும் சுருணைக் கனிகாழ் நெடுவேல், விழவயர்க் தன்ன கொழும்பல் கிற்றி எழாஅப் பாணன் நன்னடு.” “ வடாஅது நல்வேற் பாணன் நன்னடு.” (அகம்: க.க., உ.உடு) வில்லும், வேலும், வாளும் கொண்டு போர் செய்ய வல்ல பாணன், மற்போர் புரிதலிலும் வல்லய்ை வாழ்ந் திருந்தான்; தன் மற்போர் வன்மையைத் தமிழகமும் அறிந்து பாராட்டவேண்டும் என்ற வேட்கை அவனுக்கு