பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல. பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் முடியுடைப் பேரரசராய மூவேந்தர்க்கு மகட்கொடுக் கும் உரிமையுடையாாய உழுவித்து உண்ணும் வேளாளர் வழிவந்தோருள், சோழநாட்டுப் பிடவூர் கிழான் பெருஞ் சாத்தனும் ஒருவனவன் ; இஃது, “உழுவித்துண்போர், மண்டில மாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடஆரும், அழுந்துாரும், நாங்கூரும், காஆரும், ஆலஞ் சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும் முதலிய பதியில் தோன்றி, வேள் எனவும், அரசு எனவும் உரிமை எய்தினேரும் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளர்” (தொல் : பொருள் : கூo) என்ற தொல்காப் பிய உரையால் தெளிவாகும். பிடஆர், சோழ நாட்டில், உறையூர்க்குக் கீழ்பால் உள்ளதொரு வைப்புத்தலம்: அதில் மாசாத்தனர் கோயில் ஒன்றும் உளது ; அச்சாத் தனர் பெயரே, பிடஆர் கிழான் மகனுக்கும் பெயராயிற்று; பிடவூர், பலவளமும் கிறைந்த பேரூராம் பெருமையுடை யது.; அவ்ஆர்வாழ் உழவர், தம் வயல் உழுத பகடுகளே வன்புலத்தில் மேயவிடுத்து, முயற்கறியும், வாளைமீன் கறியும் உடன்கொண்ட பழஞ்சோறுண்டும், முல்ல்ை மலர் சூடியும் மகிழ்வர் ; வயலில் விளைந்த கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களைப் பறையொலித்து ஒட்டுவர் ; நெல்கொண்டு செய்த நறுங்கள்ளுண்டு களிப்பர்: மனேய கத்துக் கோழிகள் எடுக்கும் குரல் ஒலிக்கு எதிராகக், கானக்கோழியும், நீர்க்கோழியும் க்ம் நீண்ட குரல் கொடுக்கும் ; வேய்போலும் தேர்ளும், மயில்போலும் சாய அலும் உடைய உழவர் மகளிர், கிளி ஒட்டும் ஒலிகேட்டு, சேற்றுப் பறவைகளாகிய செங்கால் நாரை முதலாயின வெருவி ஒடும்; இவ்வாறு வளஞ் செறிந்த வயல்கள்சூழப் பெற்றது பிடவூர் : ' மென்புலத்து வயலுழவர் - - > AeSHSH HSHS SSAS SSAS SSAS SSAS