பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரையன் اسسسسيم إحساس. தோற்றுவாய் பண்டு பைந்தமிழ் நாடாண்டிருந்த அரசர்கள், வீரர்கள், வள்ளல்கள் ஆகியோர் வரலாற்றினை உரைக்கத் தொடங்கியதில் இந்நூல் ஆருவது. இதுகாறும், சோர், சோழர், பாண்டியர், வள்ளல்கள், அகுதை முதலிய சச பேர்கள் என்ற தலைப்புக்களின் கீழ் நூற்றுப்பதினன்கு தலைவர்களின் வரலாறு உரைக்கப்பெற்றுளது. திரையன் முதலாக, வேங்கைமார்பன் ஈருக, இருபத்தொன்பது தலைவர்களின் வரலாறு இதன்கண் விரித்துரைக்கப்பெறு கிறது. இவ்வாறு எடுத்துக் கூறப்பெற்ற பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுகிலத் தலைவர்கள், பெருகிலக் கிழார்கள், வீரர்கள், வள்ளல்களேயல்லாமல் வேறு சிலரும் தமி ழகத்தே வாழ்ந்துள்ளனர். அன்னர் வரலாறு, விரித்துக் கூறலாகாமைகுறித்து, புலவர் வழி அறிந்த அவர்கள் செய்திகளை ஈண்டு ஒர் அளவு கூறிச் செல்லல் நன்ரும். 1. அத்தி : கரிகாற் பெருவளத்தான் கண்டிருக்கக் காவிரியாற்றில் கழார்த்துறைக்கண் நீராடிய ஆட்டனத்தி யின் வேறுபட்டவன் இவன். சேரன் படைத்தலைவ ரோடு கழுமலம் எனும் இடத்தே, சோழர் படைத்தலைவன் பழையகுெடு போரிட்டு இறந்தவன். (அகம்: சச). 2. அந்துவஞ்சாத்தன் : ஒல்லையூர் பூதப் பாண்டியன் நண்பருள் ஒருவன் ; உாைசால் அந்துவம் சாத்தன்” என அவனல் பாராட்டப்பெற்றவன். (புறம்: எக.)