பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லி 71 இவ்வாறு வன்கண்மைமிக்க வீரரும், அன்புகாட்டும் ஆயரும் கலந்து வாழும் வேங்கட நாடாண்ட புல்லி, இரவ லர்க்கு இல்லை என்னது ஈயும் வண்மையும், அதனல் பெற்ற வளமார் புகழும் உடையனவன். அவன் அத்தகை யான் என அறிந்த புலவர்கள், அவனைப் பொய்யா நல் விசை மாவண்புல்லி’ (அகம் : கூடுக) என்றும், 'நெடு மொழிப் புல்லி” (அகம்: கூகங்) என்றும் சுருங்கிய வாய் பாட்டான் கூறிப் பெருகப் பாராட்டினர்.