பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ᏋᎦr . போளுர்கிழவன் பழையன் சோணுட்டுக் காவிரியாறு வளமான ஊர்களைத் தன் இருபாலும் கொண்டோடும் கவின் உடையது. அத்தகைய ஊர்களுள் ஒன்று போரூர் ; போஒர் என வழங்கப்பெறும் அப் பேரூர் காவிரி பாய்வதால் பெற்ற பெருவளம் உடை யது. அப்போரூரில் பழையன் என்பானெரு படைமற வன் வாழ்ந்திருந்தான். பழையன், விற்படை, வேற்படை களில் நன்கு பழகியிருந்தான். அவன் பகைவர்மீது எறி யும் வேல், தப்பாத சென்று தன் தொழிலை முடிக்கும். பழையன் வில்வளைத்து கின் ருல், மழைத்துளிபோன்ற அம்புகள் பல அவன் கையினின்றும் போந்து பகைவரைப் பாழ் செய்யும், பழையன் இங்ங்னம் போாற்றல் உடை யன் என்பதை அறிந்தான். அக்காலைச் சோளுடாண் டிருந்த சோழன் செங்கணுன், அவனே அழைத்துத் தன் பெரும்படைக்குத் தலைமை தாங்கும் பெரும்பணியை அளித்தான். சோழர்படையில் பணியாற்றி வந்தான் பழையன், * . . . . . . . சோழன் செங்களுன், அன்று சேரநாட்டு அரசனய் ஆண்டிருந்த சேரமான் கணக்கால் இரும்பொறை என்பா னெடு பண்ககொண்டிருந்தான். கடைசியில், சோநாட் டைச் சேர்ந்த கழுமலம் எனும் இடத்தே கொங்குநாட் இப் படைகளும், சோணுட்டுப்படைகளும் எதிர்த்துப் போரிடத்தொடங்கின. ஆண்டு அமைந்திருந்த சேரர் பாசறை பேரரண் உடையது, ஆற்றல் வாய்ந்த படைக் தலைவர்களாய நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலாய பலர் அதை கின்று காத்து வந்தனர். சோழர்படைக்குத் தலைமை தாங்கிச் சென்ருன் பழையன். போர்தொடங்கியவுடன்ேயே, பழையன் பேராற்றல் காட்டிப்போரிட்ட்ான் ; ஒரே பகலில், பகைவர் படைத் தலைவர் அறுவரையும் கொன்ருன் , அவர்கள், காத்து கின்ற அரணையும் அழித்தான். சோர் படை சிதைந்தது;