பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. மலையமான் சோழிய ஏனுதி திருக்கண்ணன் தென்னர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், பெண்ணே பாற்றுப் பர்ய்ச்சலையுடையதும், திருக்கோவலூரைத் தலே நகராகக் கொண்டதுமான நாடு, பண்டைக்காலத்தில், மலாடு அல்லது மலேயமானுடு என்ற பெயர் பெற்றிருந்தது. அங்நாடு, காடும் மலைகளும் சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலாலோ, பகைவர்களாலோ, அழிவுறுவதில்லை. அக் நாட்டில் அந்தணர் பலர் வாழ்ந்திகுந்தனர். அக்காட்டின் இடையே, முள்ளூர் என்ற அரண்மிக்க மலையொன்.றம் இருந்தது. அந்நாட்டை மலேயர், அல்லது மலையமான்கள் என்ற அரசர்கள் ஆண்டு வந்தனர். அம்மலையமான்கள் மாபிலே வந்தவன் திருக்கண்ணன். இவன் சோழ அரசின் கீழ்ப் படைப்பணியாற்றும் பெருவலியுடையனவன்; அவ் வாறு பணியாற்றியதால் பெற்ற சோழிய ஏனுதிப் பட்டத் தையும் பெற்றிருந்தான். மலையமான்களுள் சிறந்தானுய கிருமுடிக்காரியின் மகனே இத் திருக்கண்ணன் எனக் கூறுவாரும் உளர். - - - காவிரிபாய்ந்து வளங் கொழிக்கும் சோழவள நாடு, பங்காளிப்போரால் பாழடைந்து விட்டது; நல்ல அரசை இழந்து விட்டது அந்நாடு; அந்நாட்டு அரியணைக்கு வர வேண்டியவனே மிகவும் இளைஞன்; அவன் காயத்தார், அவனையும் அழித்தொழிக்கத் திட்டமிட்டனர்; அஃதறித்த அவ்வரசிளங்குமரன், தங்கள் குலத்தின்பால் குன்ருத அன்புடையவரும், தங்களுக்குத் துயர் வந்தபோதெல்லாம் துணைபுரிவோரும் ஆகிய மலையமன்னர்கள்பால் வந்து அடைக்கலம் புகுந்தான். அப்போது அந் நாடாண்டிருக் தான் திருக்கண்ணன். அவன் தந்தையும், அப்போது தான் இறந்துவிட்டான்; ஆகவே, தானே முன்வந்து, தன் தந்தை தோழன், சோழர் குல இளவரசனுக்குத் துணை