பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. மூவன் விரைந்து பொருள் தாராமை கண்டு, பெருந்தலைச் சாத்தனால் வருக்கிப் பாடப்பெற்ருருள் ஒருவன் மூவன். நெய்தல் கிலத்தைச் சார்ந்த மருதவளம் நிறைந்த நாடுடை யான் அவன் ; அவன் நாட்டில், பொய்கைக்கண் மீன் தேர்ந்துண்ட நாரைகள், அப்பொய்கைக் கரைக்கண் கிடக்கும் நெற் போரிடத்தே துயில் கொள்ளும் ; இடை யிடையே கெய்தல் மணக்கும் கெல்விளை கழனிகளில் தொழிலாற்றும் உழவர், ஆம்பலின் அகன்ற இலையில் மது வுண்டு மகிழ்ந்து, கடலின் அலையொலிக்கேற்பப் பாடி ஆடு வர். மூவன், இததகு வளநாடு பெற்றிருந்தும், பரிசில் வேண்டி வருவார்க்குவழங்கி வாழும் வளம் அறியா ஞயினன்; வளஞ்சால் பெருகாடுடையான் மூவன் என அறிந்த புலவர் பெருந்தலைச் சாத்தனர், அவன்பால் பரிசில் பெறுவான் வேண்டி, அவனுார் சென்று அவனைப் பாராட்டினர்; புலவர் தம் பெருமையறியும் பீடி லாயை மூவன், அவர்க்குப் பரிசில் அளியானுயினன்; அது கண்டு வருந்திய புலவர், கம் உள்ள வருத்தத்தால், மூவனுக்கு உறுதுயர் உண்டாதலும் கூடும் என அஞ்சி, அவன், தன் குல் துயரடைதல் கூடாது என்ற பெரும் பேரெண்ண முடையாய், அவன் நோயற்ற நல்வாழ்வில் நெடித வாழ வாழ்த்திச் சென்ருர். ... '". - பொய்கை காரை போர்வில் சேக்கும்; செய்தலங் கழனி கெல்லரி தொழுவர், கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அசலடை அரியல் மாங் கித் தெண்கடல் படுதிாை இன்சீர்ப் பாணி தாங்கும் மென்புல வைப்பின் கன்னட்டுப் பொருக!” 'நசைதா வந்து கின்இசை நுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ, வாள்மேம் படுக! ஈயா யாயினும், இரங்கலே கால்?--