பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகுதை - அகுதை, கூடல் நகரில் வாழ்ந்தவன் ; ஊக்கமும், முயற்சியும் ஒருங்கே உடையவன்; பகைவரைப் பலகாலும் வென்.அ வென்று வீறுகொண்ட வேற்படை உடையவன் : அறவழி கின்று அரும் போர் ஆற்றி அமர் வெல்லும் அரிய படைத்துணே யுடையவன்; அகுதை மேற்கொண்ட போர் ஒன்றில், பகைவர் ஏவிய திகிரிப் படையொன்று இவன் மார்பில் தைத்துப் பெரும் புண் உண்டாக்கிற்று என்ற ஒரு செய்தி நாட்காலேயில் ஊரெல்லாம் பரவியிருக் தது; ஆல்ை போரெல்லாம் முடிந்த வழி, அச்செய்தி பொய்ச் செய்தியாம் என்பது புலயிைற்று ; அகுதை, தன்சீனப் பாடிவரும் பொருநர், கூத்தர் முதலாம் பரிசிலர்க்குப் போரின்கண் தான் கைப்பற்றிய பிடியும், களிலும், பெரும் பொருளும் வழங்கி வள்ளியோனுய் வாழ்ந்திருந்தான் ; அவன்பால் பரிசில் வேண்டி வந்து, அவனேப் போற்றிப் புகழும் பொருகர், பறையொலியால் பாடுற்றது அவன் ங்ாளவை. ஒருகால், பாழிநகரில், அப்பாழிக் குரியோயை கன்னன் என்பானின் ஆருயிர் நண்பனுய ஆப் எயினன், அங்கன்னனேக் காத்தம் பொருட்டு, அவன் பகைவன் மிகுதிலி' யொடு போரிட்டு உயிர் துறந்தான் , அவன் இறந்தது" அறிந்த உரிமை மகளிராம் வேண்மகளிர், களம் போக்து கடுந்துயர் உற்றனர் தன் பொருட்டு உயிர் துறந்து வீழ்ந்: தானேக் காணவேண்டும் என்ருே, அவன் மனேவியர் ஆய ரைத் துடைத்தல் வேண்டும் என்ருே கருதாளுய், அச னுள்ளேயே அடங்கியிருந்தான் கன்னன். அக்காலே,. ஆண்டுப் போந்து, அம்மகளிர் துயர் களேந்தான் அகுதை. ய் எயினன் உரிமை மகளிர்க்கு உண்டாய உறுதுயர் போக்கித் துணைபுரிந்த உரமும், உயர்வும் உடையணுய அகுதைக்கு அக் காலத்து அரசர் யாரோ ஒரு சிலரால்உறுதுயர் உண்டாக இருந்தது. அக் கிலேயில், அவனே, அரண் அமைந்த இடத்தே வைத்துப் போற்றிக் கர்த்தன்ர் கள், கோசர் எனும் குலத்தைச் சேர்ந்த வீரர் சிலர். சோழன்