பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அ. சிறுகுடிகிழான் பண்ணன் காவிரியின் வடகரைக்கண் சிறுகுடி என்ருேர் ஊர் உளது. சோனுட்டில் திருவிழி மிழலைக்கு அண்மையில் உள்ளதும், ஞானசம்பந்தர் பாடலேப் பெற்ற பெருமை புடையதுமாய சிறுகுடியே, இச்சிறுகுடியாம் என்ப; அச் சிறுகுடி, நெல்லி, பாதிரி, மாப்போலும் பயன்தரு மரங் கள் கிறைந்த மலர்ச்சோலேயுண்மையால் மாண்புற்றது; இச் சிறுகுடியும், ஆண்டுள அம் மரங்களும் புலவர் பாராட் டும் பெருமையுடையன. இச் சிறுகுடிக்கண், பண்ணன் எனும் பெயர் பூண்டோன் ஒருவன் வாழ்ந்திருந்தான் ; வேளாண்மைத் தொழில் மேற்கொண்டு வாழ்ந்தோயை அப் பண்ணன், பகைவர் தம் பெரும் படையைப் பாழாக்க வல்ல பேராற்றலும் பெற்றிருந்தான். பகைவர் யானேப் படை பலவற்றை அழித்து வெற்றிபெற்ற அவன் வேற். படை, அவ் யானேகளின் குருதிக்கறை படிந்து சிவந்து தோன்றும். இவ்வாறு களம் பல வென்ற விறுடைய ஒகவே, விரக்கழல் புனேந்த காலுடையணுய்க் காட்சி தரு வன் பண்ணன். பண்ணன்பால் பாராட்டற்குரிய பிறி தொரு பண்பும் பொருந்தி யிருந்தது. உலகியல் ஒழுங் காக நடைபெறுவது, தம் நலம் கருதாது, பிறர் நலமே பேணும் பெரியோர்கள் வாழ்வதினுலேயே என்றும் கூறு வர் உலகியல் உணர்ந்தோர். இவ்வாறு எதையும் தமக் கெனப் பேணிக்கொள்ளாது, பிறர்க்கே அளித்து உலக வாழ்விற்கு உறுதுணே புரியும் உயர்ந்தோர்களுள் பண்ண லும் ஒருவனுவன். பண்ணனும் தனக்கென வாழாது பியர்க்குப் பயன்படவே வாழும் விழுமிய வாழ்வுடைய வைன். -

  • வென்வேல் -

இலேகிறம் ப்ெயர ஒச்சி, மாற்ருேர் மலேமருள் யானே மண்டமர் ஒழித்த கழற்கால் பண்ணன் காவிரி வடவயின் - கிழற்கயம் தழீஇய நெடுங்கால் மா." (அகம்: க.எ.எ) "கைவள் வீகைப் பண்ணன் சிறுகுடிப் - பாதிரி கமழும் ஒதி.” (புறம்: எ0)