பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அகுதை 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை துண்ணிலேப் புன்காழ் நெல்லிப் பைங்காய்.” (அகம்: நிச) பண்ணனேப் பாடிப் பரிசில் பெற்ருேர் பலராவர் அவன்பால் பரிசில் பெற்ற புலவர்கள், அவனேப் பாடிப் பரவு வதைத் தம் கடமையாகக் கொண்டனர்; சோணுட்டாயை பண்ணன் அளித்த பரிசில் பெற்ற பாண்டி நாட்டுப் புலவ ராய மதுரை அளக்கர் ஞாழலார் மகளுர் மள்ளனர், “பண்னனேயும், அப் பண்ணன் மேற்கொள்ளும் உழவுத் தொழிற்கு உறுதுணையாய எருதுகளையும், ஏற்றத்தையும் நாள்தோறும் பாடக் கடவேகுைக ! அங்ஙனம் பாடேஞ) யின், பெரு நன்றி கொன்ற பழியுடையேயை என்னேயும், என் சுற்றத்தினரையும் பொருள் அளித்துப் புரத்தலேப் புரி யாது, வறுமை வாட்டப் புறத்தே போக விடுக, எங்கள் காட்டு வேந்தனுய வழுதி' என்று கூறுகின்றனர் என்ருல், பண்ணன் பெருமையினே என்னெனப் பகர்வது ! 'பண்ணன், வினேப்பகடு ஏற்றம் எழlஇக் கிணேதொடா நாடொறும் பாடே யிைன், ஆன மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன் பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானே அண்ணல் யானே வழுதி கண்மா றவி இயர் என் பெருங்கிளைப் புரவே.' (புறம்: .அ.அ) பாம்பறியும் பாம்பின்கால் என்ப வள்ளல் ஒருவன் சிறப்பினே அவன் பால் பரிசில் பெறும் புலவர்கள் பாராட்டு வதில் சிறப்பொன்று மில்லே , வள்ளல் ஒருவனே, அவனேப் போலும் பிறிதொரு பெருவள்ளல் பாராட்டுதல் வேண்டும்: அதுவே உண்மைப் பாராட்டாம் அத்தகு பெருஞ் சிறப்பு - பண்ணற்கு உண்டு; பெருங்கொடை வள்ளலாய குளமுற். நததுத துஞ்சிய கிள்ளிவளவன், பண்ணன் பெருங்கொடை யைப் பாராட்டியுள்ளான் புலவர் பதின்மர் பாராட்டைப் பெறும் பெரும் பேறுடையயை கிள்ளிவளவனே பண்ண