பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக. சேந்தன் பண்டைத் தமிழ்நாட்டுப் பேரூர்களில் ஆர்க்காடும் ஒன்று ஆர்க்காடு, இடையிடையே நெய்தல் மலரும் நெற் கழனிகளேக்கொண்டது; அவ்வூரை அடுத்துள்ள காடு , நெல்லி மரங்களே நிறையக் கொண்டது; அவ்வூரை, உரிமை கொண்டு ஆண்டிருந்தான் அழிசி என்பான்: அவன் கள் ளுண்டு களித்துக் காடு புகுந்து வேட்டையாடவும், வாட் போரில் வந்தெதிர்த்த பகைவர்களே வானுலகு அனுப்பவும் வல்ல விரர்களைப் பெற்ற படையுடையவன். அவ் வழிசியின் மகனுய்ப் பிறந்தவன் சேந்தன் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை, என்னேற்ருன் கொல் எனும் சொல்.” என்ற நல்லுரைக்கேற்ப, நாட்டவர் எல்லாம், இவன் தந்தை அழிசியைக் குறிப்பிடுந்தோறும், இவன் பெயரை யும் இணேத்து, இவன் தந்தை அவன் எனப் பாராட்டும் கிலேயில், சேந்தன் தந்தை அழிசி" எனக் கூறும் வண் ணம், பெருஞ் செயலும், அருந்திறலும் உடையய்ை வாழ்ந் தான். கடத்தற்கு அரியன எனக் கருதப்பெறும் பகைவர் தம் பேரரண்களே யெல்லாம் பாழ் செய்த பேராற்றல் உடைய சேந்தன் ஒருகால் காவிரியாற்றில், பலரும் ரோ டும் பெருந்துறையாகிய மருதத்துறையில், நீராடுவோர்க் குத் துன்பம் செய்து உலாவிய யானையை அடக்கி, ஆண் டுள்ளதொரு மருத மரத்தில் பிணித்தான். அத்துணேப் பேராற்றல் உடைய சேந்தன், தன்பால் பரிசில் வேண்டி வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளியோனுகவும் வாழ்ந்திருந்தான். சேந்தன், யானேயை அடக்கியது காவி ரிக் கரையில் ஆதலாலும், அவன் தந்தை அழிசியின் பெயர், சோழர் பெயரொடு இணைத்து வழங்கப் பெறுதலா லும், சேந்தன், சோணுட்டினனுவன் எனத் தெரிகிறது.

  • ցրraչի իլյ -

பலராடு பெருங்துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானேச் சேந்தன் தந்தை அரியலம் புகவின், அந்தோட்டு வேட்டை