பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0 சோழிய ஏனுதி திருக்குட்டுவன் குட்டுவர், குடவர், பொறையர் எனச் சேரர் குடி வகையால் பலராவர்: அவருள் குட்டுவர்குடியுள் வந்தவன் திருக்குட்டுவன்: திருக்குட்டுவன் தந்தை, சேரநாட்டு அரசியலில் பேரரசய்ை வாழ்ந்திருந்தான்; உலகெலாம் முழங்கும் முரசினேயும், வலிதின் இயன்ற தேரினேயும் பெற்றிருந்தான் அவன்; வஞ்சிமாநகரில் இருந்து அர சாண்டிருந்தான்; அவ்வாறு பேரரசாய் வாழ்ந்திருந்த குட்டுவர்குடி, எவ்வாருே வலிகுன்றிவிட்டது. அது வலி குன்றிய காலத்தே வந்து தோன்றின்ை திருக்குட்டுவன். அதல்ை, அந்நாட்டு அரசியலில் இடம்பெறமாட்டா அவன், தான் பிறந்த குட்டுவர்குடியோடு உறவுடைய சோணுடு சென்று, அக்காலே அந்நாடாண்டிருந்த சோழன் படையில் பனிமேற்கொண்டான். அதல்ை, மக்கள் அவனேச் சோழிய ஏகுதி திருக்குட்டுவன் என அழைத்தனர். படைத்தலைவனுய்ப் பணியாற்றுவதற்கேற்ற பேராற்றல் அவன்பால் பொருந்தியிருந்தது. விற்போர் பயின் று. பயின்று விரிந்த மார்பும், வலிபொருந்திய பெரிய கையும், பகைவரைத் தப்பாது தடியவல்ல வாளும் உடையான் திருக்குட்டுவன். படையில் பணியாற்றி ஒய்வுபெற்ற குட்டு வன், தன்ட்ைடகத்ததாய வெண்குடை என்ற வயல்வளம் கிறைந்த ஊரில் வாழத் தொடங்கின்ை. அவ் வெண்குடை இன்று வெங்குடி என வழங்குகிறது. - வெண்குடைவாழ், சோழிய ஏனாதி திருக்குட்டுவன், வள்ளியோன் என வையகம் புகழ்வது கேட்ட மாடலன் மதுரைக்குமரனுர் என்ற புலவர், அவன் பால் பரிசில் பெறுவான் வேண்டி, வெண்குடை வந்து, திருக்குட்டுவன் தந்தை புகழைப் பாடி கின்ருர். அவர் புகழ்ந்தன கேட்டு மகிழ்ந்த திருக்குட்டுவன். அவருக்கு, ஆற்றல்மிக்க ஆண் யானே ஒன்றைப் பரிசு அளித்தான்; யானேயைக்கொண்டு போதற்கு அஞ்சிய அப் புலவர், அதை அவன்பாலே திருப்பி அனுப்பிவிட்டார் தான் கொடுத்த பொருகிளப் புலவர் தன்பாலே அனுப்பியது கண்ட திருக்குட்டுவன்