பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ. தழும்பன் - வாணிப வளத்தாம் சிறந்த கடற்கரைப் பட்டின மாகிய மருங்கூர்ப் பட்டினத்தை அடுத்து ஊனுணர் என்ருேர் ஊர் உண்டு; ஊணுார் நீர்வளமும், கிலவளமும் கிறையக்கொண்டது; வெண்ணெல் அரிபவர், அரியப்புகு முன்ன்ர், அந் நெல் வயலில் கூடுகட்டி வாழும் புள்ளினங் களே. ஊறு செய்யாது ஒட்டக் கருதித் தண்ணுமை முழக் குவர்; அவ்வயலருகே, வானுற ஓங்கி வளர்ந்திருக்கும் தெங்கு முதலாம் மரங்களின் மடல்களில் கூடுகட்டி வாழும் தேனீக்கள், அத் தண்ணுமையொலி கேட்டஞ்சித் தம் கூடுவிட்டு ஒடும், தேனீக்கள் அற்ற தேன்கூடு பற்றற்கு எளிதாதல் அறிந்த அவ்வூர்வாழ் குயவர், அத் தேன்கூ டழித்துத் தேன் கொள்வர். அவனுர்ச் சேரிவாழ் பாணர், கிறுவலே கொண்டு சிறுமீன் பிடித்துண்டு மகிழ்ந்து வாழ்வர். இத்துணை வளம்செறிந்த ஊணுளர், சூழ அமைந்த பெரிய மதில் உடைமையால் பெற்ற அரிய காவலை யும் உடைத்து. "வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக் கண்மடற் கொண்ட திங்தேன் இரியக் கள்ளரிக்கும் குயம்; சிறுசின் மீன்சிவும் பாண்சேரி - வாய்மொழித் தழும்பன் ஊனுார்.” (புறம்: டசஅ) ஊணுார்க்கண், கொடையும், கொற்றமும் குறைவறப் பெற்ற குருசில் ஒருவன் வாழ்ந்திருந்தான் வாட்போர் வல்லயை அவ்விரன், தான் மேற்கொண்ட போர் ஒன்றில், பெண் யானேயால் மிதியுண்டு பெரும்புண் பெற்ருன்; அப் புண் தந்த தழும்பு, பெரிய வழு துணங்காய் அளவு பெரி தாதல் கண்ட மக்கள், அவனே வழுதுணேத்தழும்பன் என்று பெயரிட்டுப் பாராட்டினர் தழும்பன், வாட்போர் வல்லவன்; வாய்மையே வழங்கும் வழக்குடையான்; தன்னைப் பாடிவரும் பாணர் முதலியோர்க்கு வரையாது வழங்கும் அ.-8