பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 அகுதை சிறந்த உழவனுவன், தொல்லோர் வழிவந்த தொல்புகழ், உடையான் எனப் புலவர் அவனேப் பாராட்டியுள்ளார் : "அறவர் அறவன்; மறவர் மறவன்; மள்ளர் மள்ளன்; தொல்லோர் மருகன்.' ஐயூர் முடவனுர், கிள்ளிவளவனேக் காணச் சென்ருர், அவரோ முடவர்; நடந்து சேறல் அவரான் இயலாது; ஏறுபூண்ட தேர் ஏறிச் சென்ருர், சென்ற நாடோ சோணுடு; நீர்வளம் மிக்கது; அதனுல் செல்லும் வழி யெல்லாம் சேருன் நிறைந்தது: அச் சேற்று நிலத்தில் கடந்து நடந்து, மேல்நடக்கமாட்டாது தளர்ந்துவிட்டது. எருது; உறையூர் அவை யடைதல் எவ்வாறு என அறிய மாட்டாது வருந்தியிருந்தார்; வழிவந்தார் சிலர், அண்மை யில் வாழும் தோன்றிக் கோவின் பெருமையினேப் பகாள். கேட்டார்; விரைந்து சென்று அவனேக் கண்டார்; புலவர் தம் உள்ளக் குறிப்புணர்ந்த தோன்றிக் கோ, அவர் உள்ளம் உவக்கும்வண்ணம், வானத்து மீன்போல் எண்ணத்தொலேயா ஆனிரையும், அவை ஈர்த்துச் செல்லற். கேற்ற ஊர்தியும் உவந்தளித்து அனுப்பின்ை : . . " 'கடுந்தேர் அள்ளற்கு அசாவா கோன்சுவல் பகடேயத்தையான் வேண்டிவங் கதுவென ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின், மீன் பூத் தன்ன உருவப் பன்னிரை ஊர்தியொடு கல்கி யோனே, சீர்கொள இழும் என இழிதரும் அருவி வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.' - (புறம்: க.க.க).