பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதியன் 111 கோடல் அறமாகாது; ஆக்கமும் ஆகாது;' எனக்கூறித் தடுத்தலும், அவ்வாறு அடக்கவும் அடங்காது, சென்று அழித்து, அதல்ை உயிர் துறந்தானேப் பழித்தலும் உலகின் இயற்கையாகும். ஆகவே, ஈண்டுக் கூறிய புன்னே, அன்னிக் குரியதன்று திதியனுக்கே உரியது. அதை அழிக்க ஆசை கொண்டான் அன்னி அவ்வாசை அறமன்று எனத் தடுத்தான் எவ்வி அதைக் கேளாது போய். அழித்து அழிந்தான் அன்னி ஆகவே அவன் செயலேப் பழித்தனர் புலவர்கள் எனக் கோடலே பொருந்தும் நெறியாம். இவ்வாறு புன்னேயை அழித்த அன்னியைக் கொன்ருேன் ஒரு திதியன. இவன் வரலாறு உணரத் துணேபுரிந்தவர்கள், நக்கீரர், வெள்ளிவிதியார், கயமினுர் முதலிய மூவராவர். "எவ்வி, நயம்புரி கன்மொழி அடக்கவும் அடங்கான், பொன்னினர் நறுமலர்ப் புன்னே வெஃகித் திதியளுெடு பொருத அன்னி போல விளிகுவை." 'அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் கொன்னிலே முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னே குறைத்த ஞான்றை, வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே." "அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலே முழுமுதல் துமியப் பண்ணிய நன்னர் மெல்லினர்ப் புன்னே.” - - - (அகம்: க.உ.சு; சடு (கசடு) வேளிரொடு பகைகொண்டு, வாட்போர் புரிந்தவ னும், பானர் முதலாம் பரிசிலர், பொருள் பல பெற்று மகிழும் வண்ணம் நாளவை இருந்த கணிமிக நல்கும் கொடைக்குணம் உடையானுமாய திதியன் ஒருவன். இவன் வரலாறு உரைத்தார் மாமூலனர்: - "பாணர் ஆர்ப்பப் பலகலம் உதவி நாளவை இருந்த நனேமகிழ் திதியன்