பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அகுதை அவர் அவ்வாறு கூறியுள்ளமையால், ஆண்டு எதிர்த்த ஏனேயோரெல்லாம் வேளிர் அல்லர் என்பதே அவ. குத் தாதல் அறிக. ஆகவே, அத் திதியன் வேள் ஆகான, கிற்க. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யன் பகைவயை திதியனேப் பாடிய நக்கீரரே, அன்னியொடு புன்னே காரணமாகப் போரிட்ட திதியனேயும் பாடியுள் எமையால், அவ்விரு திதியர்களும் ஒருவனே ஆவர்: ஆகவே, அத்திதியனும் வேள் அல்லன் அவன் கோசன் அல்லன் என்பது முன்னரே கூறப்பட்டது. திதியன் எனும் பெயருடையார், இருவரோ, மூவரோ அல்லர்; அப்பெயருடையான் ஒருவனே; அவனேப் பாடிய புலவர்கள் அனைவரும், அவன் செயல் அனேத்தையும் எடுத்துக்கூருது. அவற்றுள், தாம் தாம் விரும்பும் சிலவற்றை மட்டுமே எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளனர்: ஒருவர் பாராட்டிய பண்பை ஒருவர் பாராட்டாராயினர். ஒருவர் ஒன்றைப் பாராட்டினர்; ஒருவர் பிறிதொன்றைப் பாராட்டினர். ஆகவே, அன்னியொடு போரிட்டோனும், அன்னிமிஞிலியின் துயர் களேந்தோனும், பாண்டியனேப் பகைத்தோனும், வேளிரொடு வாட்போர் புரிந்தோனும், அழுந்தைக்குரியோனும், பொதியிலில் வாழ்ந்தோனும் ஒருவனே அவன், கோசனும் அல்லன், வேளும் ஆகான்; அழிசி, அறுகை, குமணன், கொடுமுடி, தழும்பன், திரை யன், நாஞ்சில்வள்ளுவன், காலேகிழவன் என்பாரைப்போல், அவ்விரு இனங்களினும் வேறுபட்ட இனத்தவனுவன் எனக் கொள்க. - இவ்வாறு கொள்ளும் முடியினே ஏற்றுக்கொள்ளத் தடையாக நிற்பது, திதியன் ஊர் அழுந்தையாம் என ஒர் இடத்தும், குறுக்கைப் பறந்தலேயாம் என மற்ருேர் இடத்தும், பொதியிலாம் எனப் பிறிதோரிடத்தும் கூறப் ஆபடுதலேயாம். சங்க இலக்கியங்களால் அறியப்படும் பண்டைத் தமிழகத்துப் பேரூர்கள். இன்னின்ன; அவை உள்ள இடங்கள், இன்னின்ன என வரையறுத்துக்கூறுதற் கேற்ற சான்றுகள் கிடைக்கப் பெறவில்லே; ஆகவே, அன்