பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகுதை II. அளித்தால் இன்னது உண்டாம் என ஒன்றை எதிர் நோக்கி அளிக்கும் அறவிலே வணிகளுவன் என எதிச் பார்த்தல் இயலாது ; அகுதை, தன் பகைவனே அழித்தற் பொருட்டே, அவன் மகளிர்க்குப் பிடியானேயைப் பரிசில் அளித்தான் எனல் அவன் வண்மைக்கு இழுக்காம்; அவன் அளித்த பரிசில் அந் நோக்கு உடையதாயின், புலவர்கள் அதைப் போற்றிப் புகழ்ந்திரார்; மேலும், அகவன் மகளிர், நன்னன் மாமரத்தில் பிடியானேயைப் பிணித்தனர் என்ருல், அவ் வகவன் மகளிர்பால் அன்புடைய நன்னன், தன் மாமரத்தைக் காக்க, அவரைத் துன்புறுத்தல் வேண்டுவ 'தில்லை அவர் பிணித்த பிடியானேயைக் கட்டவிழ்த்து விட்டால் அஃதொன்றே போதும், தன் மாமரத்தைக் காக்க. மேலும், வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை யராய அகவன் மகளிர், தம்மாட்டுப் பேரன்புடையணுய்ப் பரிசில் பல அளிக்கும் பேரரசன் ஒருவனுக்கு அழிவு தரும் அரசியல் சூழலில் தலையிடார். 'வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் திதறிந்தன்ருே வின்றே: எனங் பரிசில்மாட்டு அப்பழியில்லே எனக் கோவூர் .கிழார் கூறுவதையும் உணர்க. குமணன் பால் தாம் பெற்ற யானையை, இளவெளிமான் காவல் மரத்தில் பிணித்தனரே பெருஞ்சித்திரனர் எனின், இளவெளிமான் தம் தகுதி யறிந்திலன்; அவனுக்கு அதை அறிவித்தல் வேண்டும் எனத் தம் அகத்தெழுந்த வேட்கையை கிறைவேற்றுவான் வேண்டியே, குமணனைப் பாடிப் பெற்ற யானையை, இசை வெளிமான் மரத்தில் கட்டினரேயல்லாமல், அவர் கட்டிய யானே, இளவெளிமானப் பழிவாங்கற் பொருட்டு அவன் பகைவன் ஒருவன்பால் பெற்றது. அன்று குமணன், இன. வெளிமான் பகைவன் எனக் கூறினர் ஒருவரும் இலச். மேலும், அகுதை ஆற்றல்மிக்க பெருவீரன் என்ப. கோசர் படைத்துணையும் பெற்றவன் அத்தகையான் நன்னன் கொடுஞ்செயற்கேற்ற தண்டத்தை நன்னனுக்கு அளிக்க விரும்பியிருப்பனேல், நன்னன் கண் எதிரிலேயே, அவன் களேயத்தவறிய வேள்மகளிர் பூசலைக் களைந்த அத்துணை