பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

으. அக்குரன் அக்குரன், வள்ளல்கள் என வாழ்த்தப்பெற்ற எழுவ ருள் ஒருவனல்லன் ஆயினும், வள்ளன்மைக்கு எடுத்துக் காட்டாகக் கொடுக்கிலாதானப் பாரியே! என்று கூறினும் கொடுப்பாரிலே" எனப் பாரிவள்ளல் காட்டப்படு வதைப்போன்றே, இவனும், 'அக்கு ர ன் அனேய கைவண்மை" எனக் காட்டப்படும் பேறுபெற்ருேளுவன்; அதியமான் நெடுமான் அஞ்சி, வையாவிக்கோப்பெரும் பேகன் ஆக இருபெரும் வள்ளல்களைப் பாடிப் பாராட்டிய அரிசில் கிழாரே, கொடைக் குணத்திற்கு எடுத்துக்காட் டாக இவனேக்கூறுவர் எனின், 'வண்மையுடையவன் இவன்' என ஏனேயோர் வாழ்த்துவதில் வியப்புண்டோ? உலகைக் காக்கும் கடமையுடைய வானம், பெய்யாது பொய்ப்பினும் சேரலாதன் கொடுத்தலேக் கைவிடான்; கொடுப்பதையே கடமையாகக் கொண்டவன் அவன்; அக் கொடைக் குணத்தினின்றும் அவன் உள்ளம் சிறிதும் கோடாது; கொடுக்கும்போதும் குறையக் கொடுப்பானல்லன் வருந்தி வந்தோர் வயிற்றுப்பசித் தீத்தணியப் பெரும் பொருள் தருகுவன்." "கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சி னன்; மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித், தண்ணிய எழிலி தலையா தாயினும், வயிறு பசிகூர ஈயலன்;" 'மன்னுடை ஞாலம், புரவெதிர்கொண்ட, தண்ணிய எழிலி தலையாது மாறி, மாரி பொய்க்குவ தாயினும், சேரலாதன் பொய்யலன் நசையே (பதிற்றுப் : உ0, க.அ) என வியந்து பாராட்டுமளவு வாரி வழங்கும் வள்ளியோய்ை வாழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குக் கொடைக்குணத் தில் ஈடாகக் கூறப்படுகிருன் இவ் வக்குரன் எனின், இவன் கொடைக்குணம் எத்துணேச் சிறப்புடைத்து என் பதை உய்த்துணர்ந்துகொள்க. தலையாய வள்ளல்களுள், அக்குரன் எனும் பெயர் உடையான் ஒருவன் உளன் எனினும், இவன் வரலாறு உரைக்கும் அரிசில் கிழார், "அமர் உடற்றுவதில், ஆற்றல் மிக்க நூற்றுவர்க்குத்