பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அதியன் பேரரசாய் வாழ்ந்த பாண்டியர் படையில் பணி யாற்றிய வீரர்களுள் அதியன் என்பானும் ஒருவன் ; அதிகன் எனவும் அழைக்கப்பெறுவன்; அதியன், சங்க காலப் பாண்டியருள் தலைசிறந்தோனும், தலையாலங்கானத் துச் செருவென்றேனும், பசும்பூட் பாண்டியன் எனப் பலவிடத்தும் அழைக்கப் பெறுவோனும் ஆய நெடுஞ் செழியன் காலத்தே பாண்டியர்படையில் பணியாற்றினன். அதியன் மலேயிடை ஊர் ஒன்றில் வாழ்ந்திருந்தான்; வேங்கையும், பலாவும் நிறைந்து பயன்தரும் மலே, அவன் மலை. அம்மலைக்கண், பாண்டியர் படையும் கொடியும் பாசறைகொண்டிருக்கும் : - 'அதியன், கோளற வறியாப் பயங்கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய வில்கெழு தானேப் பசும்பூட் பாண்டியன் - களிறணி வெல்கொடி. (அகம்: கன உ) பாண்டியர்க்கு உரிய ஊர்களுள், நெல்வளம் மிக்க நல்லூர் ஒன்றை, நாட்டாசையால் கைப்பற்றி, அள்ளூர் எனத் தன் பெயர்வைத்து ஆண்டுகொண்டிருந்தான் அள்ளன் என்பாைெரு கொள்ளேக்கூட்டத் தலைவன வன், அள்ளி எனவும் அழைக்கப்பெறும் அவன் செயல் பொருத பசும்பூட் பாண்டியன், அவனே வென்று துரத்தும் பணியைப் படைத்தலைவன் அதியனுக்களித்திருந்தான் : அதியனும், அவ்வாறே சென்று, அவனே வென்று பணி கொண்டான். - - 'செறுர்ே. களிறுடை அருஞ்சமம் ததைய நாறும் , ஒளிறுவாள் தானேக் கொற்றச் செழியன் - பிண்ட நெல்லின் அள்ளுர்." - (அகம்: சசு) "ஆடுகடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள் அள்ளனப் பணித்த அதியன்." (அகம்: ,உடு)