பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அகுதை அக்காலத்தே, கொங்கர் எனும் கூட்டத்தார், தமிழ் காட்டுட் புகுந்து, கேடுவிளேத்து வாழ்ந்துவந்தனர்; அவ ரால், தம் அரச வாழ்விற்கே அழிவுண்டாமோ எனவும் அஞ்சினர். அரசர்கள். அதனல், அவரைத் தம் நாட்டி னின்றும் ஒட்டுவதைத் தம் தலையாய பணியெனக் கொண் டனர் ; பசும்பூட் பாண்டியனும், அக் கொங்கரை வென்று துரத்தி அவர் கைப்பற்றி ஆண்ட நாடுகள் பலவற்றை மீள வும் பெற்ருன் பாண்டியன் பெற்ற இவ் வெற்றிக்குப் பெரிதும் துணேபுரிந்தவன் அதியனே. 'கொங்கர் ஒட்டி, - - காடுபல தந்த பசும்பூட் பாண்டியன்.' (அகம் : உகிங்) இவ்வாறு பாண்டியர்தம் பேரரசின் வாழ்விற்குப் பெருந்துணே புரிந்த அதியன், இறுதியில், வாகை எனும் ஊரிடத்தே நடந்த பெரும் போரில், தன் யானேப்படை யையும் இழந்து, தானும் இறந்தான். பாண்டியநாட்டி னின்றும் தம்மைத் துரத்திய அதியன் இறந்தது கேட்ட கொங்கர் உள்ளக் களிப்பால் உவந்து மகிழ்ந்தனர். "கூகைக் கோழி வாகைப் பறங்தலைப் பசும்பூட் பாண்டியன் வினே வல் அதியன் களிருெடு,பட்ட ஞான்றை . . ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே." . . . . . . . . . - (குறுங் : கூகக.) இவ்வாகை எனும் ஊர் எயினன் என்பானுக்கு. உரியது என மதுரைப் படமங்கமன்னியார் பாட்டால் தெரி வதால்-'வ்ண்கை எயினன் வாகை" (புறம்: கூகடு) அதியன், அவ்வெயினனெடு மேற்கொண்ட போரிலேயே உயிர் துறந்தானதல் வேண்டும். இங்ஙனம், பேராண்மை மிக்க பெருவீரனுய் வாழ்ந்த அதியன், பெருங்கொடை வள்ளலாகவும் விளங்கின்ை பரிசில் அளிப் பாரைப் பாரெலாம் அறியப் புகழ்ந்து பாடும் இரவல்ர் எது வேண்டி வருவரோ அதைத் தவ்ருது அளித்துப் புரந்துவந்தான் அதியன் அதியன் இறந்தான் எனக் கேட்ட இரவலர்