பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. அவியன் திருமுனைப்பாடி காட்டில், அவியனூர் என்ருேர் ஊர் பண்டு இருந்தது என்றும், அவ்வூர், அவியனூர் நாட்டுத் தலைநகராம் பெருமையுற்றும் திகழ்ந்தது என்றும் திரு வதிகைக் கல்வெட்டொன்.அ கூறுகிறது : (A. R, No. 419 of 1921). அந் நாடும், ஊரும் அப் பெயர் பெறுதற்குக் காரணமாயவன், அவியன் எனும் பெயர் பூண்ட காட்டு காட்டுத் தலைவனுவன். அவன் நாடு, மலையும் காடும் மயங்கிய ஒருபெரு நாடு; தம் தாயிடத்துப் பால் உண்ண வேண்டி அத் தாயை விடாது சுற்றித் திரியும் ஆட்டுக் குட்டிகள் நரைத்த முகத்தினவாய குரங்குக்குட்டிகளைக் கண்டவுடனே, பால் உண்ணலேயும் மறந்து, அக் குரங்குக் குட்டிகளோடு கூடி ஆடி மகிழும் காடுகளே இடையிடையே கொண்டது அவன் காடு, மழைமிகு மேகங்கள் என்றும் இடையருது இயங்குவதால், பழம்நிறை மரங்களும், வளம் அமிகு மூங்கில்களும் வளர்ந்து வனப்புற்றது அவன் நாட் டகத்து மலைகள். அத்தகு வளநாடாண்ட அவியன், தன் ஆமனேவிமாட்டு மட்டிலாப் பேரன்புடைய பெரியோனுவன்; அவளும், இயற்கையழகும், செயற்கையழகும் இணையறக் கொண்டு, கற்பெனும் பொற்பும் உடைய காரிகையாவள்; அத்தகையாள மனேயாளாகப்பெற்ற அவியன், தன் நாடு நோக்கிவரும் பாணர் முதலாம் பரிசிலர் தமக்கு வறுமை போக வழங்கி வாழ்வளிக்கும் வள்ளியோய்ை வாழ்ந்திகுந் தான். இவ்வாறு, அவியன் மனேவாழ்க்கையின் மாண்பும், மாரிபோல் வழங்கும் வள்ளன்மைச் சிறப்பும் உணர்ந்த காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனரும், மாருேக் கத்து நப்பசலேயாரும் அவனேப் பாடிப் பாராட்டியுள்ளனர். 'களிமலி கள்ளில் நற்றேர் அவியன் ஆடியல் இளமழை குடித் தோன்றும் பழங் துரங்கு விடரகம்." (அகம் : உஎக) 'குறுமுலேக்கு அலமரும்பாலார்வெண்மறி நரைமுக ஊகமொடு உகளும் வரையமல் கான்கெழு காடன் கடுங்தேர் அவியன். 'கற்புடை மடங்தை தற்புற்ம் புல்ல மெல்லணேக் கிடந்தோன். (புறம் :-அங்}