பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö9一。 ஆட்டன த்தி கரிகாற் பெருவளத்தான், சோனுடாண்டிருந்த காலத்தே அத்தி எனும் இயற்பெயர் உடையாைெரு ஆண்டகை வாழ்ந்திருந்தான்; ஆற்றுப் புதுப்புனல் வருங் கால், அதிற் பாய்ந்து ஆடவல்லணுதல் அறிந்த அக்கால மக்கள், அவனே ஆட்டனத்தி எனப் பெயரிட்டுப் பாராட் டினர் கச்சும், கழலும் கட்டி, இடையில் ஒலிக்கும் பாண் டில் மணியும், மார்பில் மணம்காறும் மாலேயும் அணிந்து, தழைத்து வளர்ந்த தலைமயிரும், பருத்து உயர்ந்த தோளும் உடைய்ய்ை ஏறுபோன்ற எழில்மிகு நடையும், பேரழகும் கொண்டு பெருமிதம் தோன்ற கிற்கும் ஆட்டனத்தியையும் அவன் புனலில் புகுந்துஆடும் ஆற்றலேயும் கண்டு அக்கால மக்களும், அரசரும் ஒருங்கே மகிழ்வர். இவ்வாறு அழகும் ஆண்மையும் உடையயை ஆட்டனத்தி, வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவரும் பாராட்டும் பெரும் புலமை உடையராய ஆதிமந்தியாரை, ஆருயிர் மனேவியாப்பெற்ற மாண்பும் உடையனவன். காவிரி ஆற்றில் கழார்ப் பெருந்துறைக்கண், ஆண்டு தோறும் புதுப்புனல் வருங்கால் பெருவிழா நிகழும்: ஆற்றுப் புனலில் குதித்து ஆடவல்ல அந்நாட்டு இளேஞர் அன்று ஒருங்கே சேர்ந்து ஆடித்திரிவர்; அவ்வாடல்கானச் சோனுட்டு மக்களும், மன்னனும் ஆண்டுவந்து மகிழ்வர்; ஓராண்டு நடைபெற்ற விழாவின்போது, கரிகாற் பெரு, வளத்தானுடன், ஆதிமந்தியும், ஆட்டனத்தியும் வந்திருந் தனர்; விழாக்கண்டு அகமகிழ்ந்திருந்தான் ஆட்டனத்தி: அவனும் ஆடவல்லவன் ஆடவல்ல அவல்ை, பிறர் ஆடு வதைப் பார்த்திருக்க இயலவில்லேபோலும்; அவனும் ஆட விரும்பின்ை: ; உடனே புனலாட்டிற்கேற்ற புதுமுறை ஆடையணிந்து ஆற்றில் பாய்ந்து ஆடத் தொடங்கிவிட் உான்; அவன் ஆடல்கண்டு அனேவரும் அகம் மகிழ்ந்தனர்: அவன் ஆடல் அத்துணேச் சிறந்திருந்தது; ஆயினும், அவன் அவ்வூரினன் அல்லன்; வேற்றுாரினின்று வந்தவன்;